கபில் சிபல்

வார்ப்புரு:Infobox Indian politician

கபில் சிபல் (Kapil Sibal, பஞ்சாபி : ਕਪਿਲ ਸਿਬਲ, வார்ப்புரு:Lang-hi; பிறப்பு 8 ஆகத்து 1948) ஓர் இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த கபில் 2009ஆம் ஆண்டு தில்லியின் சாந்தினிசௌக் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடுவண் அரசில் கடந்த 2009-2014 மன்மோகன் சிங் அரசில், தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராகவும்[1] மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்தார். இதற்கு முந்தைய ஆய அமைச்சரவையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகவும் புவியறிவியல் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2014ஆம் ஆண்டு தில்லியின் சாந்தினிசௌக் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, பா.ஜ.காவின் ஹர்ஷவர்தனிடம் தோற்றார்[2].

சூலை 1988ஆம் ஆண்டு பீகாரிலிருந்து மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். திசம்பர் 1989 முதல் திசம்பர் 1990 வரை கூடுதல் சொலிசிடைர் ஜெனரலாக பொறுப்பேற்றார். உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவராக மூன்று முறை (1995–96, 1997–98 மற்றும் 2001–2002) இருந்துள்ளார்.

மேற்கோள்கள்தொகு

  1. "Council of Ministers – Who's Who – Government: National Portal of India". http://india.gov.in. Government of India. 11 August 2010 அன்று பார்க்கப்பட்டது. External link in |work= (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "top-30-losers-in-lok-sabha-polls".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளியிணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கபில் சிபல்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.bharatpedia.org/index.php?title=கபில்_சிபல்&oldid=2153" இருந்து மீள்விக்கப்பட்டது