சி. கே. ஜாபர் செரீப்

வார்ப்புரு:Infobox Indian politician சி. கே. ஜாபர் செரீப் (C. K. Jaffer Sharief, 3 நவம்பர் 1933 – 25 நவம்பர் 2018)[1]) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்திய அரசின் அமைச்சரவையில் இரயில்வேத் துறை அமைச்சராக 1991 முதல் 1995 முடிய பதவி வகித்தவர்.[2]

அரசியல் வாழ்க்கைதொகு

இந்திய காங்கிரஸ் கட்சியின் கர்நாடகா மாநிலத் தலைவர் நிஜலிங்கப்பா தலைமையில் அரசியல் வாழ்க்கையைத் துவக்கியவர் ஜாபர் செரீப். காங்கிரசு கட்சி இரண்டாக பிளவுபட்ட போது, ஜாபர் செரீப் இந்திராகாந்தி தலைமையிலான இந்திரா காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்.

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் பதவியில்தொகு

இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக எட்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இந்திய அரசின் அமைச்சர் பதவியில்தொகு

பெங்களூர் வடக்கு மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜாபர் செரீப், பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் இரயில்வேத் துறை அமைச்சராக 21 சூன் 1991 முதல் 16 அக்டோபர் 1995 முடிய பதவி வகித்தவர்.

ஏப்ரல் 2016-இல் ஜாபர் செரீப் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகினார்.[3]

மேற்கோள்கள்தொகு

  1. Aiyappa, Manu (25 November 2018). "Former Railway minister CK Jaffer Sheriff dead". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 November 2018 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. Lua error in package.lua at line 80: module 'Module:Citation/CS1/Suggestions' not found.
  3. Karnataka poll shocker: C K Jaffer Sharief quits Congress

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.bharatpedia.org/index.php?title=சி._கே._ஜாபர்_செரீப்&oldid=1923" இருந்து மீள்விக்கப்பட்டது