தேசிய மக்கள் தொகை கொள்கை 2000 (இந்தியா)

ImportMaster (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:58, 24 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (robot: Import pages using சிறப்பு:Import)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)

தேசிய மக்கள் கொள்கை 2000 (National Population Policy 2000) என்பது இந்திய அரசு 2010 ஆம் ஆண்டில் எட்டப்பட வேண்டிய வகையில் சில ‌இலக்குகளைக் கொண்டு செயல்படுத்தப்பட்ட நலத்திட்டமாகும்.

சிறப்பம்சம்தொகு

இக் கொள்கை மக்கள் தொகை பற்றிய இலக்குகள் மட்டுமின்றி குழந்தை நலம், மகளிர் கல்வி, எய்ட்சு கட்டுப்பாடு போன்றவை குறித்த இலக்குகளையும் முன்வைத்தது.

2010 ஆம் ஆண்டுக்கான இலக்குகள்தொகு

  • இன்னும் எட்டப்படாமல் இருக்கும் அடிப்படை இனப்பெருக்க மற்றும் குழந்தை நலச் சேவைகளுக்கான அடிப்படைக் கட்டுமான அமைப்பை ஏற்படுத்துதல்
  • 14 வயது வரை பள்ளிக் கல்வியை அனைவருக்கும் இலவசமாயும் கட்டாயமாகவும் ஆக்குதல்
  • குழந்தை இறப்பு விகிதத்தை ஆயிரத்துக்கு முப்பதாய்க் குறைத்தல்
  • தாய்மை இறப்பு விகிதத்தை இலட்சதுக்கு நூறாய்க் குறைத்தல்
  • மொத்த கருத்தரிப்பு வீதத்தை 2.1 ஆய்க் குறைத்தல்
  • ஆயுர்வேதம், சித்த மருத்துவம் (AYUSH) ஆகிய பாரம்பரிய மருத்துவமுறைகளை உயிர்ப்பித்தல்
  • எல்லா வரும் முன் காக்கக் கூடிய நோய்களுக்கும் தடுப்பூசியை (தடுப்பு மருந்து) அனைத்துக் குழந்தைகளும் பெறும் படி செய்தல்
  • பெண்களின் திருமண வயதை 20க்கு மேல் உயர்த்துதல்
  • 80 விழுக்காடு மகப்பேறு மருத்துவமனைகளில் நடக்கும் வகை செய்தல்
  • பிறப்பு, இறப்பு மற்றும் திருமணங்களை 100 விழுக்காடு பதிவு செய்தல்
  • எய்ட்சு பரவுதலைக் கட்டுக்குள் வைத்தல் மற்றும் பால்வழித் தொற்று நோய் மருத்துவத்திற்கும் தேசிய எய்ட்சு கட்டுப்பாட்டு அமைப்பிற்கும் இடையே அதிக ஒருங்கிணைவுச் செயல்பாடுகளை ஏற்படுத்துதல்.
  • தொற்று நோய்களைத் தடுத்தல் மற்றும் கட்டுக்குள் வைத்தல்
  • சிறு குடும்ப விதியைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தல்
  • சமூகஞ் சார் திட்டங்களை மையப்படுத்துவதன் மூலம் குடும்ப நலம் ஒரு மக்கள் இயக்கமாக மாறும் வண்ணம் செய்தல்

[1]

மேற்கோள்கள்தொகு

  1. "2010 ஆம் ஆண்டிற்கான குறிக்கோள்கள்". 2011-02-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-03-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளியிணைப்புகள்தொகு

இந்திய அரசின் மக்கள் தொகை ஆணையத்தின் இணையத்தளம் பரணிடப்பட்டது 2011-02-21 at the வந்தவழி இயந்திரம் வார்ப்புரு:Stub