பிரதாப் சந்திர சாரங்கி

ImportMaster (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:52, 24 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (robot: Import pages using சிறப்பு:Import)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)

வார்ப்புரு:Infobox Indian politician

பிரதாப் சந்திர சாரங்கி (வார்ப்புரு:Lang-en) (பிறப்பு: 4 ஜன 1955), என்பவர் ஒடிசா பாலேஸ்வர் மாவட்டத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் மற்றும் அரசியல்வாதியாவார். பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். ஒடிசா சட்டமன்றத்தில் 2004 மற்றும் 2009 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நீள்கிரி தொகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்டார்.[1] 2014 இந்தியப் பொதுத் தேர்தலில் பாலேஸ்வர் தொகுதியிலிருந்து பாஜக சார்பாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[2] மீண்டும் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் அதே பாலேஸ்வர் தொகுதியிலிருந்து பாஜக சார்பாகப் போட்டியிட்டு 12956 வாக்குகள் வித்தியாசத்தில் பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த ரபீந்திர குமார் ஜெனாவை வென்றார்.[3]

இந்திய அரசின் இணையமைச்சராகதொகு

இவர் 31 மே 2019 அன்று நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு & மீன் வளத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4]

இளமைக் காலமும் கல்வியும்தொகு

1955 ஜனவரி மாதம் நான்காம் தேதி பாலேஸ்வர் மாவட்ட கோபிநாதபூரில் பிரதாப் சாரங்கி ஒரு பிராமணர் குடும்பத்தில் பிறந்தார். 1975 இல் உட்கல் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள பாலேஸ்வர் பகீர் மோகன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.[5].

சிறுவயது முதலே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு ராமகிருஷ்ண மடத்தில் சன்னியாசம் பெறவிரும்பினார். ஆனால் இவரின் தாயாரைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி கல்கத்தாவிலுள்ள ராமகிருஷ்ண மடம் இவரைத் திருப்பி அனுப்பியது. அதன்பின்னர் கிராமத்தில் பல்வேறு சமூகப்பணிகளை செய்து வருகிறார்.[6]

சமூகச் செயல்பாடுதொகு

பாலேஸ்வர் மற்றும் மயூர்பஞ்சு மாவட்டங்களிலுள்ள பழங்குடியினர் கிராமங்களில் சமர் கரா கேந்திரா என்ற பெயரில் பல பள்ளிகளைத் திறந்துள்ளார்.[7]

மேற்கோள்கள்தொகு

  1. "Shri Pratap Chandra Sarangi Profile". Naveen Patnaik, Chief Minister of Odisha website. 2012-11-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-05-25 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "'No clash between Modi wave and my image': Pratap Sarangi". The Times of India. May 23, 2019. 2019-05-23 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "'Balasore Lok Sabha election results 2019 Odisha: BJP's Pratap Sarangi defeats BJD's Rabindra Jena': Pratap Sarangi". DNA India. April 12, 2014. 2014-05-25 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here". NDTV.com (in English). 2019-05-31 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "Shri Pratap Chandra Sarangi Profile". My neta info. 2019-04-26 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. "people-are-fed-up-with-the-bjd-hot-seat-pratap-chandra-sarangi-bjp-leader". The Telegraph. October 7, 2017. 2019-04-29 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  7. "Shri Pratap Chandra Sarangi Profile". Naveen Patnaik, Chief Minister of Odisha website. 2012-11-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-05-25 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.bharatpedia.org/index.php?title=பிரதாப்_சந்திர_சாரங்கி&oldid=997" இருந்து மீள்விக்கப்பட்டது