பொதுத்துறை நிறுவனங்கள், இந்தியா

ImportMaster (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:29, 24 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (robot: Import pages using சிறப்பு:Import)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)

பொதுத்துறை நிறுவனங்கள் (Public sector undertakings in India (PSU) or (Public Sector Enterprise). இந்திய அரசு தனியாகவோ அல்லது மாநில அரசுகளுடன் இணைந்தோ, அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட மாநில அரசுகள் இணைந்து நடத்தும் தொழில், வணிகம் மற்றும் சேவை நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனங்கள் என்பர். பொதுத்துறை நிறுவனப் பங்குகளில், இந்திய அரசு அல்லது மாநில அரசுகளின் பங்கு முதலீடு 51% மேலாக உள்ளது.

பொதுத்துறை நிறுவனங்கள், இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள் என இரண்டாக வகைப்படுத்துவர்.

இந்திய அரசின் கனரகத் தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அமைச்சகத்தின் கீழ் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படுகிறது.[1]

வரலாறுதொகு

1947ல் இந்திய விடுதலையின் போது, வேளாண்மையை அதிகம் சார்ந்திருந்தது. மக்கட்தொகை பெருக்கத்தாலும், பெருந்தொழில்கள் வளர்ச்சியின்மையால் இந்தியப் பொருளாதாரம் மிகவும் பின் தங்கியிருந்தது.[2]

நாட்டின் தொழில், வணிகம் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக, 1950ல் இந்திய அரசு திட்டக் குழுவை அமைத்தது. இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு, கலப்பு பொருளாதாரத்தை நடைமுறைப் படுத்த ஐந்தாண்டு திட்டங்களை அறிவித்தார்.[3]

இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் போது (1956–60), 1956ல் நாட்டை தொழில்மயப்படுத்தும் தீர்மானத்தின் படி, இந்திய அரசின் சார்பில் பொதுத் துறை நிறுவனங்கள் துவக்கப்பட்டது.

நவரத்தினா நிறுவனங்கள்தொகு

தற்போது இந்திய அரசின் கனரகத் தொழில்கள் மற்றும் பொதுத்துறை அமைச்சகத்தின் கீழ் ஏறத்தாழ 300 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளது. அவைகளில் அதிக இலாபம் ஈட்டும் 94 நவரத்தின நிறுவனங்கள் உள்ளது. [4]

இதனையும் காண்கதொகு

மேற்கோளகள்தொகு

  1. Ministry of Heavy Industries and Public Enterprises
  2. "Chapter 1, Industrial Policy Handbook" (PDF). Industrial Policy Handbook. Office of the Economic Adviser, Ministry of Commerce and Industry. p. 2. 28 மே 2015 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 17 September 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. Ghose, Shankar. Jawaharlal Nehru. Allied Publishers. பக். 243. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8170233695. 
  4. Eligibility Criteria for Grant of Maharatna, Navratna and Miniratna Status to CPSEs