விழுப்புரம் மக்களவைத் தொகுதி
வார்ப்புரு:Infobox Lok Sabha Constituency
விழுப்புரம் மக்களவைத் தொகுதி (Viluppuram Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 13வது தொகுதி ஆகும். இது 2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு பின்னர், புதிதாக உருவாக்கப்பட்ட மக்களவை தொகுதியாகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.
தொகுதி மறுசீரமைப்புதொகு
தொகுதி மறுசீரமைப்பின்போது திண்டிவனம் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டது. அதற்குப் பதில் அதில் இருந்த பல தொகுதிகளை எடுத்தும், சில தொகுதிகளை சேர்த்தும் விழுப்புரம் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
சட்டமன்ற தொகுதிகள்தொகு
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
வென்றவர்கள்தொகு
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | கூட்டணி | ஆதாரம் |
---|---|---|---|---|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | மு. ஆனந்தன் | அதிமுக | ||
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | எஸ். ராஜேந்திரன் | அதிமுக | ||
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | ரவிக்குமார் | திமுக |
வாக்காளர்கள் எண்ணிக்கைதொகு
தேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மற்றவர்கள் | மொத்தம் | ஆதாரம் |
---|---|---|---|---|---|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 6,85,753 | 6,82,461 | 121 | 13,68,335 | ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[1] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
வாக்குப்பதிவு சதவீதம்தொகு
தேர்தல் | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு | ஆதாரம் |
---|---|---|---|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | 74.58% | - | [2] |
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | | 76.84% | ↑ 2.26% | [3] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)தொகு
21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அதிமுகவின் மு. ஆனந்தன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சுவாமிதுரையை 2,797 வாக்குகள் வேறுபாட்டில் வென்று விழுப்புரம் மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
மு. ஆனந்தன் | அதிமுக | 3,06,826 |
சுவாமிதுரை | விடுதலை சிறுத்தைகள் கட்சி | 3,04,029 |
பி. எம். கணபதி | தேமுதிக | 1,27,476 |
எம். குமார் | சுயேட்சை | 14,770 |
16வது மக்களவைத் தேர்தல் (2014)தொகு
முக்கிய வேட்பாளர்கள்தொகு
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
எஸ். ராஜேந்திரன் | அதிமுக | 4,82,704 |
டாக்டர்.கோ.முத்தையன் | திமுக | 2,89,337 |
கே. உமா சங்கர் | தே.மு.தி.க | 2,09,663 |
ராணி | காங்கிரசு | 21,461 |
17வது மக்களவைத் தேர்தல்(2019)தொகு
வாக்காளர் புள்ளி விவரம்தொகு
ஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
7,14,211 | 7,13,480 | 14,27,874 | 11,35,540 | 79.53% |
முக்கிய வேட்பாளர்கள்தொகு
இத்தேர்தலில், 7 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 6 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ரவிக்குமார், பாமக வேட்பாளரான, வடிவேல் இராவணனை 1,28,068 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | தபால் வாக்குகள் | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் |
---|---|---|---|---|---|
ரவிக்குமார் | திமுக | 2,910 | 5,59,585 | 49.28% | |
வடிவேல் இராவணன் | பாமக | 1,426 | 4,31,517 | 38% | |
கணபதி | அமமுக | 80 | 58,019 | 5.11% | |
பிரகலதா | நாம் தமிழர் கட்சி | 129 | 24,609 | 2.17% | |
அன்பின் பொய்யாமொழி | மக்கள் நீதி மய்யம் | 72 | 17,891 | 1.58% | |
நோட்டா | - | - | 61 | 11,943 | 1.05% |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 சனவரி 2014. 2014-03-30 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். 2012-12-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஏப்ரல் 30, 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. 29 செப்டம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>