விஷ்ணுராம் மேதி
விஷ்ணுராம் மேதி (Bishnuram Medhi, வார்ப்புரு:Lang-as, பிஷ்ணுராம் மேதி) (ஏப்ரல் 24, 1888–சனவரி 21, 1981) அசாமின் முதலமைச்சராக 1950 முதல் 1957 வரை[1] பணியாற்றிய இந்திய அரசியல்வாதியும் விடுதலை இயக்க வீரரும் ஆவார். இவர் தமிழக ஆளுநராக சனவரி 1958 முதல் மே 1964 வரை பணியாற்றி உள்ளார். [2]
இளமை வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]
விஷ்ணுராம் மேதி குவஹாத்தி அருகிலுள்ள அயோ என்ற சிற்றூரில் சோனாராம், அலேகி என்ற பெற்றோருக்கு வறுமை மிகுந்த விவசாயக் குடும்பத்தில் ஏப்ரல் 24, 1888இல் பிறந்தார். குவகாத்தியில் உள்ள காட்டன் காலேசியேட்டு பள்ளியில் தமது மெட்றிகுலேசன் படிப்பை 1905இல் முடித்தார்.[3] பள்ளிப் படிப்பிற்குப் பின்னர் கொல்கத்தாவிலுள்ள மாகாணக் கல்லூரியில் பட்டப்படிப்பையும் பட்ட மேற்படிப்பை கரிம வேதியியலில் தாக்கா பல்கலைக்கழகத்திலிருந்தும் முடித்தார். பின்னர் சட்டப் படிப்பை மேற்கொண்டு 1914இல் வழக்குரைநர் அவையி்ல் உறுப்பினரானார்.
இந்திய விடுதலை இயக்கம்[தொகு | மூலத்தைத் தொகு]
விஷ்ணுராம் இந்திய தேசிய காங்கிரசில் 1920களில் இணைந்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். 1926இல் பாண்டுவில் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டு வரவேற்புக் குழுவில் இணைச் செயலாளராக பணியாற்றினார். 1930இல் அசாமிய மாநில காங்கிரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]
விடுதலைக்குப் பிந்தைய அரசியல்[தொகு | மூலத்தைத் தொகு]
1935இல் மாநில சுயாட்சி வழங்கப்பட்டபோது கோபிநாத் போர்டோலாய் அமைச்சரவையில் விஷ்ணுராம் அமைச்சராகப் பணியாற்றினார். 1950இல் அசாமின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957 வரை இப்பதவியில் நீடித்தார். [5] 1958 முதல் 1964 வரை சென்னை மாநில ஆளுநராக பணியாற்றினார்.[5]
இறப்பு[தொகு | மூலத்தைத் தொகு]
விஷ்ணுராம் மேதி தமது 92ஆம் அகவையில் சனவரி 21, 1981இல் இயற்கை எய்தினார்.[6]
நினைவு அஞ்சற்றலை[தொகு | மூலத்தைத் தொகு]
விஷ்ணுராம் மேதி நினைவாக இந்திய அஞ்சல் துறை 24.4. 1989 ல் அஞ்சற்றலை வெளியீடு செய்தது.[7][8][9]
மேற்சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]
- ↑ Assam Chief Ministers List
- ↑ Past Governors
- ↑ "Esteemed Students of the Cotton Collegiate School". Cotton Collegiate Alumni.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "History of the Assam Pradesh Congress Committee". Assam pradesh Congress Committee.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
- ↑ 5.0 5.1 "States of India since 1947". Wporldstatesmen.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
- ↑ http://www.iaslic1955.org/bishnu_ram_medhi.html
- ↑ http://www.indiapost.gov.in/Images%5CStamps1989%5C24-04-1989.jpg
- ↑ http://www.indiapost.gov.in/Stamps_List.aspx
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-02-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-11-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
உசாத்துணை[தொகு | மூலத்தைத் தொகு]
- "Bishnu Ram Medhi". India's Who is Who. Compare Infobase Limited.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]
- தமிழக ஆளுநர்களின் பட்டியல் பரணிடப்பட்டது 2009-02-05 at the வந்தவழி இயந்திரம்