11 மில்லியன் இலக்கு திட்டம்

11 மில்லியன் இலக்கு திட்டம் (Mission XI Million (MXIM)), இந்திய நடுவண் அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் ஆதரவுடன் 2017 பிபா 17-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைக் குழுவால் அறிவிக்கப்பட்டது. இது இந்தியாவின் மிகப்பெரிய பள்ளி தொடர்புத் திட்டமாகும். இது பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளை அணுகுவதன் மூலம் இந்தியாவில் பள்ளி மட்டத்தில் காற்பந்தாட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் அதனை விளையாடும் முறையை அவர்கள் பள்ளியளவில் அறிந்துகொள்ளச் செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும் எதிர்காலத்தில் காற்பந்தாட்டம் இந்தியாவில் விருப்ப விளையாட்டாக மாற்றுவதே இதன் இறுதி இலக்காக இருந்தது. இது 11 மில்லியன் பள்ளிக்குழந்தைகளை பிபா யு -17, உலகக் கோப்பை இந்தியா 2017 காற்பந்து போட்டியை இலக்கு வைத்துப் பயிற்றுவிக்கும் விதமாக தொடங்கப்பட்ட திட்டமாகும்.[1][2]

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு