தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம்

வார்ப்புரு:Infobox organization தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம் (National Biodiversity Authority, NBA)இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணை (2002)யை செயல்படுத்தும் நோக்கத்துடன் 2003ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.இது 1992ஆம் ஆண்டில் பல்லுயிர்ப்பரவல் மாநாட்டில் கலந்துகொண்டு கையொப்பமிட்டதை அடுத்து எடுக்கப்பட்ட செயலாகும்.[1]

புவியில் வாழும் அனைத்து உயிர் வகைகளின் மொத்த தொகுப்பே பல்லுயிர்பரவல் எனப்படும். உலகின் மிகப்பெரிய பல்லுயிர் வளம் மிக்க 12 நாடுகளில் நம் இந்திய நாடும் ஒன்றாகும். உலகின் மொத்த நிலபரப்பில் 2.5 சதவீதம் உள்ள நம்நாட்டில், உலகில் காணப்படும் உயிர் வகைகளில் 7.8 சதவீதம் இங்கு காணப்படுகின்றது. மேலும் நம்நாடு பாரம்பரியம் மற்றும் கலாச்சார அறிவாண்மை மிக்கதாகும்.

1992, உலகின் பல்லுயிர்பரவல் மாநாட்டில் இந்தியா பல்லுயிர்பரவல் ஓப்பந்தம் நிபந்தனை 3 மற்றும் 15ன்படி, தேசிய சட்டத்திட்டத்திற்று உட்பட்டும் பரஸ்பர ஒப்பந்தத்தின்படியும் மக்கள் தங்கள் நாட்டின் உயிர்வளங்களை முறையாக பகிர்ந்து பயன்படுத்துவதற்கும் பிற நாடுகளும் இந்நாட்டு மரபியல் வளங்களை பெற வசதி செய்து தரவும் இக்கூட்டமைப்பு அறிவுறுத்துகிறது. பல்லுயிர்ப்பரவல் ஒப்பந்தம் நிபந்தனை 8(j))ன்படி, பாரம்பரிய அறிவாண்மை, செயல்முறைகள், புதிய யுக்திகள், மற்றும் சரிசம பகிர்வின் மூலம் நாட்டின் உயில் வளங்கள் பாதுகாப்பதிலும் நிலையான பயன்பாடு அடைவதிலும் அந்நாட்டு மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

பல்லுயிர்பரவல் என்பது பல்வித நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் உள்ளடக்கிய பல்துறை சார்ந்த நெறிமுறையாகும். ஒன்றிய அரசு, மாநில அரசுகள், தன்னாட்சி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்ற அனைத்துமே பல்லுயிர்பரவலின் பயனாளிகள் ஆவர். இந்தியா முக்கிய கொள்கையாக உட்புகுத்தி கொண்டிருந்த, முக்கிய சவாலாக விளங்கிய 'சரிசம பகிர்வு' பெறுதலின் நோக்கங்கள் பல்லுயிர்பரவல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது.

பயனாளிகன் பங்கேற்புடன் பல்வித தீவிர ஆலோசனைகள் நடத்தியபிறகு, ஒன்ரிய அரசு கீழ்க்கண்ட முக்கியம்சங்களை உள்ளடக்கிய பல்லுயிர்ப்பரவல் சட்டத்தை 2002ம் வருடம் அமுலுக்கு கொண்டுவந்தது.

  1. நாட்டின் உயிர் வளங்கள் மற்றும் அதன் சார்ந்த அறிவாண்மையை பெறுவதற்காண சரிசம பகிர்வு முறையை ஒழுங்குமுறைப்படுத்துதல்.
  2. பல்லுயிர்பரவல் பாதுகாப்பும் நிலையான பயன்பாடும்.
  3. பல்லுயிர்ப்பரவல் சார்ந்த அந்நாட்டு மக்களின் பாரம்பரிய அறிவாண்மையை போற்றி பாதுகாத்தல்.
  4. பல்லுயிர் வளம் பாதுகாப்பு மற்றும் அதன் பயன்பாடு சார்ந்த பாரம்பரிய அறிவாண்மையைப் பெற்றுள்ள அந்நாட்டு மக்களுடன் இனைந்து பயனை பகிர்ந்து கொள்ளுதல்
  5. 'பாரம்பரிய பல்லுயிர்பரவல்' பகுதியாக அறிவிப்பதன் மூலம், சிலமுக்கிய இடங்களின் பல்லுயிர் வளத்தை முறையாக பாதுகாத்தலும் அப்பகுதியினை மேம்படுத்தலும்.
  6. அச்சுறுத்தப்படும் உயிர்வகைகளை பாதுகாத்தலும் மறுவாழ்வளித்தலும்.
  7. பல்வித நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகள் உள்ளடக்கிய தனிப்பட்ட குழுக்கள் அமைத்து பல்லுயிர்பரவல் சட்டத்தை அமுலாக்குதல்.

சான்றுகோள்கள்தொகு

  1. "Biological Diversity Act 2002 and establishment of National Biodiversity Authority ,Chennai". Ministry of Environment and Forests. மார்ச் 30, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. Feb 7, 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

மேலும் தெரிந்து கொள்ளதொகு

வார்ப்புரு:இந்திய ஆணையங்கள்