புதிய திவால் சட்டம்

வார்ப்புரு:Infobox legislation

Emblem of India.svg

புதிய திவால் சட்டம் (Insolvency and Bankruptcy Code, 2016) என்பது திவால் நிலை ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை வரையறுக்க மக்களவையில் திசம்பர் 2015-ல் அறிமுகம் செய்யப்பட்டது.பின் மே 5,2016 ஆம் ஆண்டில் இது மக்களவயில் நிறைவேற்றப்பட்டது.[1] மே28 ,2016 ஆம் ஆண்டு குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்றது.[2]

திவால் உருவான வரலாறுதொகு

பழங்கால கிரேக்க நாட்டில் ஒருவர் தான் வாங்கிய கடனை அடைக்க இயலாத நிலையில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை தான் கடன் பெற்றவர்களிடத்தில் அடிமையாக நட்த்தப்பட்டனர். குறந்தபட்சம் 5 ஆண்டுகள்வர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர்.

இந்தியாவில் புதிய திவால் சட்டம்தொகு

புதிய திவால் சட்டம் பாராளுமன்றத்தில் மே முதல் வாரத்தில் அனுமதிபெற்றது.ஒரு தனியார் நிறுவனமோ அல்லது பங்குதாரர் நிறுவனமோ அல்லது தனி நபரோ தான் வாங்கிய கடனைஅடைக்க இயலாமல் திவால் நிலையில் இருக்கும் போது கடன் வாங்கியவருக்கும் , கொடுத்தவருக்கும் இடையே ஒரு சுமூகமான நிலையை கையாள்வதே இதன் நோக்கம்.

முக்கிய அம்சங்கள்தொகு

இந்தச் சட்டத்தின் படி கடன்கொடுத்தவரோ அல்லது வங்கியோகடன் வாங்கிய தனிநபரின் மீதோ அல்லது நிறுவனத்தின் மீதோ தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தில் திவால் நடவடிக்கையை மேற்கொள்ள முறையிடலாம். இதே முறையினை கடன் வாங்கியவரும் மேற்கொள்ளலாம் அப்போது இந்தத் தீர்ப்பாயம் தனிநபரின் பொருளாதார பிரச்சினைகளை ஆரய்ந்து முடிவு எடுக்கும். கடனை திருப்பி செலுத்த 6 மாத காலம் அவகாசம் வழங்கும். ஆனால் அந்த காலகட்டத்தில் அந்த நபரின் மீது வழக்கு தொடர இயலாது. இந்த தீர்ப்பாயத்தில் மூன்று முக்கிய நபர்கள் உள்ளனர். அவர்களாவன,

  1. திவால் நிபுனர்.
  2. தீர்வு நிபுனர்
  3. திவால் அறங்காவலர்.

எடுக்கப்படும் நடவடிக்கைகள்தொகு

ஆறு மாதத்திற்குள்ளாகவும் செலுத்த இயலாத நிலையில் இந்த தீர்ப்பாயம் பின்வரும் செயல்களை மேற்கொள்ளலாம்,

  • நிறுவனத்தின் பெயரிலோ அல்லது தனிநபரின் பெயரிலோ இருக்ககூடிய நிதியை வேறொருவரின் பெயருக்கு மாற்றம் செய்ய இயலாது.
  • சொத்துக்களை விற்க இயலாது.
  • பிற கடன்களை வாங்க இயலாது.
  • நிர்வாக அதிகாரம் முழுமையும் தீர்வு நபரிடம் சென்றுவிடும்.
  • செய்திதாள்களில் அறிவிப்பு வெளியிடும்.

மேற்கண்ட அனைத்து நடைமுறைகளினாலும் பணம் பெறையலாத சூழ்நிலையில் ஐ.பி.பி.ஐ( Insolvency and Bankruptcy Board Of India) கடன்பெற்றவர்களின் சொத்துக்களை விற்று கடனை சரிசெய்யும் நடவடிக்கையினை மேற்கொள்ளலாம்.

சான்றுகள்தொகு

  1. "திவால் சட்டம் ஒப்புதல்". எக்கனாமிக் டைம்ஸ். ஆகத்து 16,2016 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |access-date= (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Insolvency and Bankruptcy Code" (PDF). Gazette of India. 25 ஜூன் 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 31 May 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளிஇணைப்புகள்தொகு

"https://ta.bharatpedia.org/index.php?title=புதிய_திவால்_சட்டம்&oldid=1591" இருந்து மீள்விக்கப்பட்டது