ஹன்ஸ்ராஜ் கங்காராம்
ImportMaster (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:52, 23 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
வார்ப்புரு:Infobox Indian politician ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹீர் (Hansraj Gangaram Ahir), மகாராட்டிர அரசியல்வாதி. இவர் 1954-ஆம் ஆண்டின் நவம்பர் பதினொன்றாம் நாளில் மகாராட்டிரத்தில் உள்ள நாந்தேட்டில் பிறந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் சந்திரப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினொன்று, பதினான்கு, பதினைந்து மற்றும் பதினாறாவது மக்களவைகளில் உறுப்பினராகப் பணியாற்றினார்.[1] 2011 முதல் 2014 வரை தொடர்ந்து நான்கு முறை ஸன்ஸத் ரத்னா எனப்படும் நாடாளுமன்ற மணி விருதைப் பெற்றுள்ளார்.[2]
பதவிகள்[தொகு | மூலத்தைத் தொகு]
இவர் கீழ்க்காணும் பொறுப்புகளை ஏற்றுள்ளார்.[1]
- 1994-96: மகாராட்டிர சட்ட மேலவையில் உறுப்பினர்
- 1996: பதினொன்றாவது மக்களவையில் உறுப்பினர்
- 2004: பதினான்காவது மக்களவையில் உறுப்பினர்
- 2009: பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர்
- மே, 2014: பதினாறாவது மக்களவையில் உறுப்பினர்
சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]
- ↑ 1.0 1.1 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
- ↑ "Sansad Ratna Awards 2016 (7th Edition)". June 2016. 2020-06-26 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>