அகில்யா ரங்னேகர்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician அஹில்யா ரங்னேகர் (1922-2009) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர் இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) ஒரு தலைவர். மேலும் 1977 முதல் 1980 வரை வடமத்திய மும்பை மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். [1]

ஆரம்ப வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

புனேவில் பிறந்தவரான அஹில்யா. எட்டு குழந்தைகளில் இளையராவார். பி. டி. ரணதிவே இவரது அண்ணன் ஆவார்.

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

1943 இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினரானா அஹில்யா, சம்யுக்த மகாராஷ்டிர இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். 1943இல் பரேல் மகிளா சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராவார். அதுவே பின்னாளில் ஜன்வாடி மகிளா சங்கமாக வளர்ந்தது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அங்கம் இது. இவர் ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய அதன் தேசிய செயல்தலைவராக 2001 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961 முதல் மும்பை மாநகராட்சி மன்ற உறுப்பினராக 19 ஆண்டுகள் இருந்தார். [2] மகாராஷ்டிர 1983 முதல் 86 வரை மகாராட்டிர இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக் குழுச் செயலாளராக பதவி வகித்தார். 1978 முதல் 2005 வரை அதன் மையக் குழு உறுப்பினராக இருந்தார். 1975 இல், இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) பொதுக்குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 1979 இல் அதன் துணைத் தலைவரானார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

அஹில்யா 1945 இல் பி. பீ. ரங்னேகரை மணந்தார். இவர்களுக்கு அஜித் மற்றும் அபி என்னும் இரு மகன்கள்.

குறிப்புக்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=அகில்யா_ரங்னேகர்&oldid=2769" இருந்து மீள்விக்கப்பட்டது