அஞ்சல் வாக்குச் சீட்டு (இந்தியா)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

அஞ்சல் வாக்குச் சீட்டு அல்லது தபால் ஓட்டு, வாக்குச் சாவடிக்கு நேரில் சென்று வாக்கு செலுத்த இயலாதவர்களுக்கு, அஞ்சல் வாக்குச் சீட்டு மூலம் தேர்தல்களில் வாக்கு செலுத்தும் முறையாகும். முன்னர் இந்தியாவில் தேர்தல் நடத்தும் பணியாளர்கள் மற்றும் தேர்தல் பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினருக்கும், பணியில் உள்ள இந்திய இராணுவம் மற்றும் துணை இராணுவப்படையினருக்கு மட்டும் படிவம் 6-இல்[1] தங்களது விவரங்களை நிரப்பி தேர்தல் நடத்தும் அலுவருக்கு அனுப்பி, படிவம் 13ஏ[2] மற்றும் அஞ்சல் வாக்குச் சீட்டை பெற்று பின் அதனை நிரப்பி, உரிய சான்றுகளுடன் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைப்பதன் மூலம் அஞ்சல் வாக்கு செலுத்தும் உரிமை வழங்கப்பட்டு இருந்தது. [3]

80 வயதிற்கு மேற்பட்டோர் & மாற்றுத்திறனாளிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

தற்போது வாக்குச் சாவடிக்கு நேரில் செல்ல இயலாத 80 வயது மேற்பட்டவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தங்கள் தேர்தல் சனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு வருகின்ற தேர்தல்களில் அஞ்சல் வாக்கு செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்தும் வகையில் இந்திய அரசு 1961-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்துள்ளது. அதனடிப்படையில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் 13-ஏ படிவத்தில் தேர்தல் அதிகாரி சான்றளிப்பார். அப்படிவத்தை நிரப்பி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அஞ்சல் வாக்குச் சீட்டை அனுப்பி வாக்கு செலுத்தலாம்.[4]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. Form 6
  2. "Form 13A" (PDF). 2014-03-27 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2019-10-27 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. 2019 Lok Sabha elections: How to vote when away from home
  4. 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இனி தபால் ஓட்டு - மாற்று திறனாளிகளுக்கும் சலுகை

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]