அஞ்செட்டி வட்டம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

அஞ்செட்டி வட்டம் , என்பது தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக அஞ்செட்டி உள்ளது.[1] இந்த வட்டமானது தேன்கனிக்கோட்டை வட்டத்தைப் பிரித்து 15 வருவாய் கிராமங்களைக் கொண்டும், 182 குக்கிராமங்களைக் கொண்டதாகவும் 2018 திசம்பர் 13 அன்று உருவாக்கப்பட்டது.[2][3] இந்த வட்டத்தில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் அதிகம் உள்ளனர். இவ்வட்டத்தில் தளி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

வட்டத்துக்கு உட்பட்ட வருவாய் கிராமங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

அஞ்செட்டி வட்டத்தை உருவாக்க தேன்கனிக்கோட்டை வட்டத்தில் இருந்து தொட்டமஞ்சு, நாட்றாம்பாளையம், அஞ்செட்டி கிழக்கு, அஞ்செட்டி மேற்கு, மாடக்கல், கோட்டையூர், உரிகம், தக்கட்டி, மஞ்சுகொண்டப்பள்ளி, ஆகிய 9 வருவாய் கிராமங்கள் ஒதுக்கப்பட்டன. மேலும் பெரிய வருவாய் கிராமங்களான அஞ்செட்டி கிழக்கில் இருந்து சீங்கோட்டை, அஞ்செட்டி மேற்கில் இருந்து வண்ணாத்திப்பட்டி, தொட்டமஞ்சுவில் இருந்து கொடகரை, நாறாறாம்பாளையத்தில் இருந்து கேரட்டி, கோட்டையூரில் இருந்து, அத்திலத்தம், மாடக்கல்லில் இருந்து கரடிக்கல் என 6 வருவாய் கிராமங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் மொத்தம் 15 வருவாய் வட்டங்கள் சேர்ந்ததாக அஞ்செட்டி வட்டம் செயல்படுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "தமிழகத்தில் புதிய வருவாய் வட்டங்கள்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்". செய்தி. தினமணி. 2018 திசம்பர் 14. 14 திசம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "அஞ்செட்டி வருவய் வட்டம் முதல்வர் தொடங்கி வைத்தார்". இந்து தமிழ். திசம்பர் 14 2018. 
  3. "2 புதிய வருவாய் வட்டங்கள் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்". 2018-12-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-08-13 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "அஞ்செட்டி புதிய வட்டத்தில் 15 வருவாய் கிராமங்கள் இணைப்பு". இந்து தமிழ். திசம்பர் 21 2018. 

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:கிருஷ்ணகிரி மாவட்டம்

"https://ta.bharatpedia.org/index.php?title=அஞ்செட்டி_வட்டம்&oldid=14054" இருந்து மீள்விக்கப்பட்டது