அத்தியூர் (பெரம்பலூர்)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

அத்தியூர் ஊராட்சி, பெரம்பலூர் மாவட்டம் (Athiyur Gram Panchayat), தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் வட்டாரத்தில், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு ஊராட்சி ஆகும். இது சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

வெள்ளாற்றின் தென்கரையில் இவ்வூர் அமைந்துள்ளது. 2011 அரசு புள்ளிவிபர கணக்கீட்டின் படி இவ்வூரின் மக்கள் தொகை 4199 பேர், 1115 குடும்பங்கள் வசிக்கின்றனர். இதில் ஆண்கள் 2049 பேர், பெண்கள் 2150 பேர்.[1]. இவ்வூரானது 637.22ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.[2]

இவ்வூரில் அரசு உயர் நிலை பள்ளியும்,[3]அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் அமைந்துள்ளது.

அத்தியூர் வரதராஜப்பெருமாள் கோயில், அத்தியூர் வடமலைஈஸ்வரர் கோயில் இவ்வூரில் உள்ள கோயில்களாகும்.



சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:பெரம்பலூர் மாவட்ட ஊராட்சிகள்