அன் மசுகரேன்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

அன் மசுகரேன் (Annie Mascarene 6 ஜூன் 1902 - 19 ஜூலை 1963) ஓர் இந்திய சுதந்திர ஆர்வலர், அரசியல்வாதி மற்றும் கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆவார், இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். கேரளாவில் முதல் பெண் அமைச்சராகவும் இருந்தார்.

குடும்பம் மற்றும் கல்வி[தொகு | மூலத்தைத் தொகு]

மசுகரேன் திருவனந்தபுரத்தில் ஜூன் 1902 இல் லத்தீன் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை, கேப்ரியல் மசுகரேன், திருவாங்கூர் மாநிலத்தின் அரசு அதிகாரியாக இருந்தார். இவர் 1925 இல் திருவாங்கூர் மகாராஜா கல்லூரியில் வரலாறு மற்றும் பொருளாதாரத்தில் இரட்டை முதுகலைப் பட்டம் பெற்றார். இலங்கையில் இருந்து திரும்பி வந்த பின்னர் திருவனந்தபுரம் மஹாராஜா'ஸ் கல்லூரியில் சட்டத்தில் பட்டம் பெற்றார். [1] [2]

சுதந்திர போராட்ட வீரர் மற்றும் ஆரம்ப அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

அக்கம்மா செரியன் மற்றும் பட்டம் தாணு பிள்ளை ஆகியோருடன் சேர்ந்து, இந்திய தேசத்திற்குள் ஒருங்கிணைப்புக்கான இயக்கங்களின் தலைவர்களில் ஒருவராக மசுகரேன் இருந்தார்.[3][4] பிப்ரவரி 1938 இல், திருவாங்கூர் மாநில காங்கிரஸ் என்ற அரசியல் கட்சி உருவாக்கப்பட்டபோது, அதில் சேர்ந்த முதல் பெண்மனி ஆவார். திருவிதாங்கூருக்கு பொறுப்பான அரசாங்கத்தை நிறுவுவதே கட்சியின் குறிக்கோளாக இருந்தது, அதன் தலைவராக பட்டம் தாணு பிள்ளை இருந்தார், மேலும், கே.டி.தாமசு மற்றும் பி.எஸ்.நடராஜ பிள்ளை, ஆகியோர் முறையே செயலாளர்கள் மற்றும் பொருளாளர் எம்.ஆர்.மாதவ வாரியர் ஆகியோர் பணியாற்றினர். மசுகரேன் செயற்குழு உரிப்பினராக நியமிக்கப்பட்டார் மற்றும் கட்சியின் விளம்பரக் குழுவிலும் பணியாற்றினார். தொழிலாளர் குழுவின் முதல் செயலாக, சிபி ராமசாமி ஐயர் நியமனத்தை நிறுத்தக் கோரி மகாராஜா ஸ்ரீ சித்திரா திருநாள் பலராம வர்மனுக்கு கடிதம் அனுப்புதல் இருந்தது.அவரது நிர்வாகத்தின் மீதான தாக்குதலுக்கு ஐயரும் அவரது ஆதரவாளர்களும் பதிலடி கொடுத்தனர். [5]

கட்சித் தலைவர், பிள்ளையுடன் மாநில அளவிலான பிரச்சார சுற்றுப்பயணத்தில்,[6] சட்டமன்றம், திவான் மற்றும் அரசாங்கத்தில் அனுமதிக்கப்பட்ட பங்கேற்பு நிலை குறித்து மசுகரேன் வெளிப்படையாக விமர்சித்தார். இந்த விமர்சனத்தால் இவர் காவல் துறையினரால் தாக்கப்பட்டார். மேலும், இவர் வீடும் தாக்குதலுக்கு உள்ளானது. அவரது சொத்துக்களும் திருடப்பட்டது.[7] இது தொடர்பான அறிக்கையினையும் காவல் துறையினருக்கு எதிராக வெளியிட்டார்.ஐயர் அவளுக்கு எதிராக மகாராஜாவிடம் பேசினார், மசுகரேன் அரசாங்கத்தை அவதூறாகப் பேசுவதாகவும், வரி செலுத்தாததை ஊக்குவிப்பதாகவும் குற்றம் சாட்டினார். அவள் ஆபத்தானவள் என்றும் அதிருப்தியைத் தூண்டுகிறாள் என்றும் காவல் துறை அதிகாரி தெரிவித்தார். [5] அவரது செயல்பாடுகள் 1939-1947 வரை பல்வேறு காலங்களில் பல கைதுகள் மற்றும் சிறைகளுக்கு வழிவகுத்தது. [1]

1938 மற்றும் 1939 இல், திருவிதாங்கூர் அரசாங்கத்தின் பொருளாதார மேம்பாட்டு வாரியத்தில் மசுகரேன் பணியாற்றினார். [8] [9] மாநில சட்டமன்றத்தில் இருந்த காலத்தில், இவர் ஒரு சிறந்த பேச்சாளராகக் கருதப்பட்டார்.[10] 1942 இல், மசுகரேன் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சேர்ந்தார், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருவாங்கூர் மாநில காங்கிரசின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 21 பிப்ரவரி 1946 அன்று மகாத்மா காந்தி மும்பையில் ஆற்றிய உரையைப் பற்றி மசுகரேனுக்கு எழுதினார், "நீங்கள் பேசும் போது எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பேசுகிறீர்கள், நீங்கள் பேசுவதற்கு எழுந்து நிற்கும்போது, உங்கள் மனதில் தோன்றும் எதையும் நீங்கள் முறையற்று பேசுகிறீர்கள். இத்தகைய கண்மூடித்தனமான பேச்சு உங்களுக்கும் திருவிதாங்கூர் ஏழை மக்களுக்கும் நல்லது செய்யாது. தவிர, உங்கள் செயலால் உங்களது பாலினத்தையும் வெட்கப்பட வைக்கிறீர்கள். " என்று எழுதினார். [10]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. 1.0 1.1 Lua error in package.lua at line 80: module 'Module:Citation/CS1/Suggestions' not found. பிழை காட்டு: Invalid <ref> tag; name "ref164" defined multiple times with different content
  2. "ANNIE MASCARENE (1902–1963)". 2013-02-01 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. Social Science History 8. Social Science History Association. 1968. பக். 99. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788183320979. https://books.google.com/books?id=x_-Iry_6ZpcC&q=Annie+Mascarene&pg=PA99. 
  4. Thanthai, Kumari (2009). Liberation of the Oppressed a Continuous Struggle. Nagercoil: Kanyakumari Institute of Development Studies. பக். 207. https://books.google.com/books?id=p_nHft2p3moC&q=Annie+Mascarene&pg=PA80. 
  5. 5.0 5.1 Karunakaran, M. (2008). "The Role of Annie Mascarene, The Freedom Fighter in the Travancore Princely State". Proceedings of the Indian History Congress (New Delhi, India: Indian History Congress) 69: 1268–1269. இணையக் கணினி நூலக மையம்:1063275330. 
  6. வார்ப்புரு:Cite thesis
  7. Ravichandran, Priya (16 February 2018). "Annie Mascarene: Freedom Fighter, Nation Builder, Guardian of Democracy and Kerala's First MP". இந்தியன் எக்சுபிரசு (Mumbai, India). Archived from the original on 24 July 2019. https://web.archive.org/web/20190724031301/https://indianexpress.com/article/gender/annie-mascarene-freedom-fighter-nation-builder-guardian-of-democracy-and-keralas-first-mp-5066085/. பார்த்த நாள்: 27 November 2019. 
  8. The Travancore Directory for 1938. Trivandrum. 1937. https://archive.org/details/pli.kerala.rare.36266. 
  9. The Travancore Directory for 1939. Trivandrum. 1938. https://archive.org/details/pli.kerala.rare.74840. 
  10. 10.0 10.1 Ravichandran, Priya (16 February 2018). "Annie Mascarene: Freedom Fighter, Nation Builder, Guardian of Democracy and Kerala's First MP". இந்தியன் எக்சுபிரசு (Mumbai, India). Archived from the original on 24 July 2019. https://web.archive.org/web/20190724031301/https://indianexpress.com/article/gender/annie-mascarene-freedom-fighter-nation-builder-guardian-of-democracy-and-keralas-first-mp-5066085/. பார்த்த நாள்: 27 November 2019. 
"https://ta.bharatpedia.org/index.php?title=அன்_மசுகரேன்&oldid=2567" இருந்து மீள்விக்கப்பட்டது