அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள் (நூல்)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Book அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள் என்பது ஒய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு எழுதிய நூல் ஆகும். இந்த நூலுக்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி வெ. இறையன்பு அணிந்துரை எழுதியுள்ளார்.

ஆறு ஆண்டுகளுக்கு மேல் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த பணிக் காலத்தில் சாதி, சமயம், தீண்டாமை, வன்கொடுமை, தலித் மக்களின் வாழ்வுரிமை ஆகியன தொடர்பான பல வழக்குகளை உசாவி, ஆய்வு செய்து தீர்ப்புகள் வழங்கும் வாய்ப்புகள் பெற்ற சூழ்நிலையில் நீதிபதி சந்துரு இந்த நூலை எழுதியுள்ளார். அம்பேத்கரின் எழுத்துகளும் பேருரைகளும் பல சிக்கலான வழக்குகளுக்குத் தீர்ப்புச் சொல்லத் தனக்கு வழிகாட்டின என்று நீதிபதி சந்துரு தம் முன்னுரையில் வரைந்துள்ளார்.

உள்ளடக்கம்[தொகு | மூலத்தைத் தொகு]

  • பௌத்தம் ஏன்?
  • மத மாற்றம்.
  • பஞ்சமி நிலம்
  • கல்லறையில் சமத்துவம்
  • பொதுச் சேவைகளில் பாரபட்சமற்ற தன்மை
  • இடஒதுக்கீடு
  • நூலகத்திற்கு வந்த கேடு
  • கழிப்பறைகளுக்கு வந்த கஷ்டம்
  • சாதி மறுப்புத் திருமணங்கள்
  • பாலியல் கொடுமைக்குள்ளாக்கப் பட்ட தலித் சிறுமிகள்
  • உணவு உண்ணும் உரிமை
  • வன்கொடுமை இழைத்த காவலர்களுக்கு நிவாரணம் மறுப்பு
  • தீண்டாமைச் சுவர் தகர்ந்தது
  • தலித்துகளின் வாழ்வுரிமை
  • கோவில்களில் வழிபாட்டுரிமை

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]