அம்பேத்கர் நகர் மாவட்டம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:India Districts அம்பேத்கர் நகர் மாவட்டம் (இந்தி अंबेडकर नगर ज़िला, உருது امبیڈکر نگر ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டம் பைசாபாத் பிரிவின் கீழ் அமைந்துள்ளது. இம்மாவட்டம் 1995ல் அப்போதைய உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் மாயாவதியால் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் பீமாராவ் அம்பேத்கர் பெயரால் அம்பேத்கர் நகர் மாவட்டம் எனப் பெயர்பெற்றது.

பொருளாதாரம்[தொகு | மூலத்தைத் தொகு]

இம்மாவட்டத்தின் பொருளாதாரம் விசைத்தறி மற்றும் விவசாயத்தைச் சார்ந்துள்ளது. இம்மாவட்டத்தில் தேசிய அனல் மின் கழகத்திற்கு சொந்தாமான 1760 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய அனல் மின்நிலையம் ஒன்று உள்ளது. மேலும் ஒரு தனியார் சிமென்ட் தொழிற்சாலையும், ஒரு சர்க்கரை ஆலையும் இம்மாவட்டத்தில் உள்ளன. 2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.[1] இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி அம்பேத்கர் நகர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 2,398,709.[2] இது தோராயமாக லாத்வியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 186வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி Script error: No such module "convert"..[2] மேலும் அம்பேத்கர் நகர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 18.35%.[2]அம்பேத்கர் நகர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 976 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் அம்பேத்கர் நகர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 74.37%.[2]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. 1.0 1.1 Lua error in package.lua at line 80: module 'Module:Citation/CS1/Suggestions' not found.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "District Census 2011". Census2011.co.in. 2011. 2011-09-30 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. US Directorate of Intelligence. "Country Comparison:Population". 2011-09-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-10-01 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வார்ப்புரு:உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்