அம்பேத்கர் நினைவில்லம், லண்டன்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

இலண்டன் அம்பேத்கர் நினைவில்லம் (Dr. Bhimrao Ramji Ambedkar Memorial) என்பது பெரிய பிரித்தானியா தலைநகரமான இலண்டனில், கிங் ஹென்ரி சாலையில் உள்ள ஒரு நினைவகமாகும். இந்த வீட்டில் அம்பேத்கர் 1921-1922 காலகட்டத்தில் வாழ்ந்தார்.

வரலாறு[தொகு | மூலத்தைத் தொகு]

அம்பேத்கர் பிரிட்டன் தலைநகரான இலண்டனுக்குச் சென்று அங்கு புகழ்வாய்ந்த இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் முதுநிலையும், முனைவர் பட்டமும் படித்து, அதிலும் பிரித்தானியரை கடுமையான விமர்ச்சிக்கும் வகையில் எழுதப்பட்ட 'பிரித்தானிய இந்தியாவில் பேரரசின் நிதியை மாகாணங்களுக்கு பகிர்ந்தளித்தல்', 'ரூபாயின் சிக்கல்' ஆகிய ஆய்வேடுகளை அம்பேத்கர் எழுதியது இந்த வீட்டில் வசித்த 1921-1922 காலத்தில்தான்.

இலண்டனில் கிங் ஹென்ரி சாலையில் உள்ள 2,050 சதுர அடி பரப்பளவில் மூன்றடுக்கு மாடிகள், ஆறு அறைகள் கொண்ட இந்த வீட்டை அதன் உரிமையாளர் 2015 ஆம் ஆண்டு விற்க முடிவு செய்தா. இதை அறிந்த இந்தியாவின் மகாராஷ்டிர அரசு 31 கோடி ரூபாய் கொடுத்து இதை வாங்கியது.[1] பின்னர் இதை நினைவில்லமாக மாற்றியது. மேலும் இது ஒரு அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டது. இதில் அம்பேத்கரின் பொருட்கள், அவர் குறித்த ஒளிப்படங்கள், அவரின் கடிதங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டன.[2]

இந்திலையில் திட்ட அனுமதி பெறவில்லை என்று என்று கூறி நினைவில்லத்தை மூட இலண்டன் காம்டென் நகராட்சி உத்தரவிட்டது. மேலும் இங்கு உள்ள அம்பேத்கரின் பொருட்களை வேறு இடத்துக்கு அப்புரப்படுத்துமாறும் சொல்லப்பட்டது. அனுமதி கோரி இந்திய தூதரகம் அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதன் பிறகு நடத்தப்பட்ட தொடர் முயற்சிகளுக்குப் பிறகு இந்த நினைவகம் செயல்பட இலண்டன் அரசு 2020 மார்ச் மாதத்தில் அனுமதி அளித்தது.[3]

குறிப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]