அம்மன்கோயில்பட்டி கல்வெட்டு

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டத்துக்குட்பட்ட அம்மன்கோயில்பட்டியில் மிகப்பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. அவ்வூரின் பெயரால் இக்கல்வெட்டு அம்மன்கோயில்பட்டி கல்வெட்டு என அழைக்கப்படுகிறது. இரண்டு வரிகளைக் கொண்டது. இதன் பழமைக் கருதி இவ்விடம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கல்வெட்டின் காலம் நான்காம் நூற்றாண்டு என்று கணிக்கப்படுகிறது.[1][2]

கல்வெட்டு வரிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

பரம்பன் கோகூர்கிழார் மகன் வியக்கன்
கோபன் கணதேவன் தோ(ட்)ட சுனை

கல்வெட்டின் பொருள்[தொகு | மூலத்தைத் தொகு]

பரம்பன் கோகூர் கிழார் என்பவரின் மகன் வியக்கன் கோபன் கணதேவன் வெட்டிய சுனை என்பது கல்வெட்டின் பொருள் ஆகும். பரம்பன் என்ற முதல் சொல் வரம்பன் என பாடபேதத்துடன் படித்தவர்களும் உண்டு.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வெளியிணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]