அல்வார் இந்திரா காந்தி விளையாட்டரங்கம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox cricket ground

இந்திரா காந்தி விளையாட்டரங்கம் (Indira Gandhi Stadium) இந்தியாவின் இராசத்தான் மாநிலம் அல்வார் நகரத்தில் உள்ளது. பல்நோக்கு விளையாட்டு அரங்கமான இங்கு கால்பந்து , வளைகோல் பந்தாட்டம் மற்றும் பிற விளையாட்டுகளுக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன. 1993 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் இராசத்தான் துடுப்பாட்ட அணி விதர்பா துடுப்பாட்ட அணியை எதிர்த்து விளையாடிய ரஞ்சிக் கோப்பை துடுப்பாட்டப் போட்டி இங்கு நடைபெற்றது.[1] இதைத் தவிர மேலும் நான்கு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் இங்கு நடைபெற்றுள்ளன. கடைசியாக 1995/1996 ஆம் ஆண்டு ரஞ்சிக் கோப்பை போட்டியில் தெற்கு மண்டல துடுப்பாட்ட அணியும் மேற்கு மண்டல மண்டல துடுப்பாட்ட அணியும் இங்கு மோதின.[2]

2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 6,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இராணுவ ஆட்சேர்ப்பு இயக்கத்தில் பங்கேற்றபோது அரங்கத்திற்குள் நுழைந்தனர். நான்கு மணி நேரம் இக்கூட்டத்தால் அரங்கு நிரம்பியிருந்தது.[3]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

புற இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]