ஆட்டுப்பண்ணை, சின்னசேலம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆட்டுப்பண்ணை, சின்னசேலம் என்பது தமிழ்நாடின், விழுப்புரம், சேலம் மாவட்ட எல்லையில் சின்னசேலம் பகுதியில் உள்ள ஒரு ஆட்டுப்பண்ணையாகும். இப்பகுதியில் பரவலாக உள்ள கறுப்பு நிற குறும்பெட்டை ஆடுகளுடன் பீக்கானீர் கிடாக்களுடன் இனக்கலப்பு செய்து தரமான ஆடுகளை உற்பத்திசெய்யும் நோக்கத்துடன் இந்தப் பண்ணையானது 1958இல் துவக்கப்பட்டது.[1] இந்தப் பண்ணை 1,866 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில் 1070 ஏக்கர் சேலம் மாவட்டத்திலும், 796 ஏக்கர் விழுப்புரம் மாவட்டப் பகுதிக்குள் வருகின்றது.[2] மேலும் இங்கு மேச்சேரி ஆடு, சென்னை சிவப்பு ஆடு ஆகிய செம்மறி ஆட்டுகளையும், தலைச்சேரி ஆடு, சேலம் கருப்பு ஆடு போன்ற வெள்ளாடுகளும் பராமரிக்கப்பட்டுவருகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. சேலம் மாவட்டம், குறும்பை ஆட்டுப்பண்ணை, சின்னச் சேலம் (1961). சேலம் மாவட்டம். சென்னை: பாரி நிலையம். பக். 185-186. 
  2. "சின்னசேலம் ஆட்டுப்பண்ணையில் கால்நடை மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும்". செய்தி. தினகரன். 8 சனவரி 2016. 8 மே 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "கொள்கை விளக்கக் குறிப்பு 2009-2010" (PDF). கால்நடை பராமரிப்புத் துறை. 8 மே 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>