ஆர். என். ரவி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
இரவீந்திர நாராயண ரவி
R.N. Ravi.jpg
15 ஆவது தமிழ்நாடு ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
18 செப்டம்பர் 2021[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
முன்னவர் பன்வாரிலால் புரோகித்
18 ஆவது நாகாலாந்து ஆளுநர்
பதவியில்
1 ஆகத்து 2019 – 17 செப்டம்பர் 2021
முதலமைச்சர் நைபியு ரியோ
முன்னவர் பத்மனாப ஆச்சாரியா
பின்வந்தவர் ஜகதீஷ் முகீ
மேகாலயா ஆளுநர்
பதவியில்
18 திசம்பர் 2019 – 26 சனவரி 2020
முதலமைச்சர் கான்ராட் சங்மா
முன்னவர் ததகதா ராய்
பின்வந்தவர் ததகதா ராய்
இந்திய தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர்
பதவியில்
05 அக்டோபர் 2018 – 31 சூலை 2019
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
பட்னா, பீகார், இந்தியா
தேசியம் இந்தியன்
வாழ்க்கை துணைவர்(கள்) லெட்சுமி ரவி
இருப்பிடம் ராஜ் பவனம், கிண்டி, சென்னை

ஆர். என். ரவி (Ravindra Narayana Ravi; பிறப்பு: 3 ஏப்ரல் 1952) என்பவர் முன்னாள் இந்திய அதிகாரி ஆவார். தமிழக ஆளுநராக 2021 செப்டம்பர் 18 அன்று பதவியேற்ற இவர்,[2] நாகாலாந்து, மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் ஆளுநராகப் பணியாற்றியவராவார்.[3][4][5][6]

குடும்பம்[தொகு | மூலத்தைத் தொகு]

பீகாரின் பாட்னாவில் பிறந்த இவருக்கு இலட்சுமி என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகளும் உள்ளனர்.[7]

பணி[தொகு | மூலத்தைத் தொகு]

இந்தியக் காவல் துறை அதிகாரியான இவர், கேரள மாநில 1976ஆம் ஆண்டு தொகுதி அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். இவர் 2012இல் இந்திய உளவுத்துறையின் சிறப்பு இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் 2014 தேசிய பாதுகாப்பு மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் அக்டோபர் 5, 2018 அன்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

ஆளுநர் பணி[தொகு | மூலத்தைத் தொகு]

நாகாலாந்து ஆளுநர்[தொகு | மூலத்தைத் தொகு]

2014 முதல் தேசிய சோசியலிஸ்ட் கவுன்சில் ஆப் நாகாலாந்து குழுவிற்கும் இந்திய அரசிற்கும் இடையில் மத்தியஸ்தராகப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இவரது முயற்சியின் பலனாகப் போராட்டக் குழுவிற்கும் இந்திய அரசிற்கும் இடையே நாகாலாந்து அமைதி உடன்படிக்கை ஆகஸ்ட் 2015 இல் கையெழுத்தானது.[8][9] 20 ஜூலை 2019 இல் நாகாலாந்து மாநில ஆளுநராகப் பதவியேற்றார்.[5]

தமிழ்நாடு ஆளுநர்[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் செப்டம்பர் 9, 2021 அன்று இந்திய குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் ஆல் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார். செப்டம்பர் 18, 2021 அன்று சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திரு சன்ஜிப் பானர்ஜி முன்னிலையில் தமிழ்நாடு ஆளுநராக பதவியேற்றார்.[10]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. தமிழ்நாட்டின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி பதவியேற்பு
  2. ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் புதிய கவர்னராக பதவியேற்பு
  3. "R N Ravi sworn in as Nagaland governor | DD News". ddnews.gov.in.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "R N Ravi sworn in as Nagaland governor". 1 August 2019 – via The Economic Times.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. 5.0 5.1 "RN Ravi Sworn In As Nagaland Governor". Indo-Asian News Service. 1 August 2019. https://www.ndtv.com/india-news/rn-ravi-sworn-in-as-nagaland-governor-2078810. 
  6. Scroll Staff. "RN Ravi, interlocutor for Naga peace talks, is new Nagaland governor". Scroll.in.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  7. https://ministersandgovernors.com/ravindra-narayana-ravi/
  8. Singh, Vijaita (2017-07-15). "Meet R.N. Ravi, who is mediating peace with the Nagas" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/other-states/meet-rn-ravi-who-is-mediating-peace-with/article19285361.ece. 
  9. "Exclusive | Nagas Will Never Join Indian Union Nor Accept India s Constitution : NSCN (I-M) Chief". thewire.in. 2020-10-17 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  10. "தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி". Puthiyathalaimurai. 2021-11-21 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வார்ப்புரு:ஆளுமைக் கட்டுப்பாடு

"https://ta.bharatpedia.org/index.php?title=ஆர்._என்._ரவி&oldid=14777" இருந்து மீள்விக்கப்பட்டது