இந்திய இரயில்வே அமைச்சகம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Government agency

இந்தியத் தொடருந்து அமைச்சகம் அல்லது இந்திய இரயில்வே அமைச்சகம் (Ministry of Railways) இந்திய அரசின் ஓர் அமைச்சகமாகும். இது நாட்டின் தொடருந்துப் போக்குவரத்திற்கு பொறுப்பேற்கிறது. இந்த அமைச்சகத்தின் கீழ் இந்தியத் தொடருந்துப் போக்குவரத்திற்கு ஏக உரிமையுள்ள இந்திய இரயில்வே இயங்குகிறது. இந்த அமைச்சகத்திற்கு ஆய அமைச்சர் தகுதியிலுள்ள தொடருந்து அமைச்சர் தலைமையேற்கிறார். ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் இரயில்வே நிதிநிலை அறிக்கையை இவர் வழங்குகிறார். நவம்பர் 10, 2014 முதல் தொடருந்து அமைச்சராக சுரேசு பிரபு பொறுப்பில் இருக்கிறார்.

அமைச்சகக் கட்டமைப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

இரயில்வே அமைச்சகம் புது தில்லியிலுள்ள இரயில் பவனிலிருந்து செயல்படுகிறது

இரயில்வே அமைச்சரகத்தில் ஒன்றிய தொடருந்து அமைச்சரும், தொடருந்து இணை அமைச்சரும் பணியாற்றுகின்றனர். தற்போதைய இணை அமைச்சராக மனோஜ் சின்கா பொறுப்பிலுள்ளார். இந்திய இரயில்வேயின் மிக உயரிய கட்டுப்பாட்டு அமைப்பான இரயில்வே வாரியம் ஓர் தலைவரையும் ஐந்து வாரிய உறுப்பினர்களையும் கொண்டுள்ளது;[1] இந்த வாரியத்தில் நிதி அமைச்சகத்தின் சார்பாளராக நிதிய ஆணையர் ஒருவரும் உறுப்பினராக உள்ளார். மேலும் தலைமை இயக்குநர் (இரயில்வே சுகாதாரச் சேவை) மற்றும் தலைமை இயக்குநர் (இரயில்வே பாதுகாப்புப் படை) ஆகியோரும் இந்த வாரியத்தில் அடங்குவர். இரயில்வே வாரியம் அமைச்சரின் மேற்பார்வையில் இயங்குகிறது.

இரயில்வே அமைச்சகம் புது தில்லியிலுள்ள இரயில் பவனிலிருந்து செயல்படுகின்றது.

மேற்சான்றுகள் மதிப்புக்குரிய ரயிவே அமைச்சர் அய்யா நான் டிக்கெட் புக் பன்னி வருகிரேன் ஆனால் லோக்கல் ஆட்கள் அதிகாரமா எஎன் சீட்டில் இருந்து அதிகாரம் பன்னுகிரார்கள் இதற்க்கு தக்க நடவடிக்கை எடுங்கள் அய்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. [1] Corporate Overview of Indian Railways Ministry

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:இந்திய இரயில்வே

வார்ப்புரு:Wikiquote