இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Organization

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India, NHAI) (வார்ப்புரு:Lang-hi) இந்திய தேசிய நெடுஞ்சாலைகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட தன்னாட்சியுடைய ஓர் இந்திய அரசு நிறுவனமாகும். இது 70,548 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலை வலையமைப்பை பராமரித்து வருகிறது.[1]

நிறுவல்[தொகு | மூலத்தைத் தொகு]

1988ஆம் ஆண்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சட்டம்,1988 மூலம் நிறுவப்பட்டது. பிப்ரவரி, 1995இல் இந்த ஆணையம் தன்னாட்சிநிலை பெற்றது.[2]

திட்டப்பணிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

சேலம் அருகே ஒரு பாலத்தில் இதேநெஆ சின்னம்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டத்தை (NHDP) படிப்படியாக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புள்ளது[1].

  • கட்டம் I: திசம்பர் 2000இல் 300 பில்லியன் செலவில் தங்க நாற்கரச் சாலைத் திட்டம், கிழக்கு-மேற்கு மற்றும் தெற்கு- வடக்கு பெருந்தடவழிகளின் பகுதி மற்றும் முக்கிய துறைமுகங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஏற்பளிப்பு.
  • கட்டம் II: திசம்பர் 2003இல் 343 பில்லியன் திட்டச்செலவில் கிழக்கு-மேற்கு மற்றும் தெற்கு- வடக்கு பெருந்தடவழிகளின் மீத பகுதிகளும் மேலும் Script error: No such module "convert". நெடுஞ்சாலைகளுக்கும் ஏற்பளிப்பு.
  • கட்டம் IIIA: மார்ச்சு 2005இல் 222 பில்லியன் திட்டச்செலவில் Script error: No such module "convert". தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு தட வழிகளாக மேம்படுத்த ஏற்பளிப்பு.
  • கட்டம் IIIB: ஏப்ரல் 2006இல், 543 பில்லியன் திட்டச்செலவில் Script error: No such module "convert". தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு தட வழிகளாக மேம்படுத்த ஏற்பளிப்பு.
  • கட்டம் V: அக்டோபர் 2006இல், Script error: No such module "convert". நீளம் தங்க நாற்கரச் சாலைகள் உட்பட, Script error: No such module "convert"., தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு தட வழிகளாக மேம்படுத்த ஏற்பளிப்பு. இது முற்றிலும் DBFO முறைமையில்.
  • கட்டம் VI: நவம்பர் 2006இல் 167 பில்லியன் திட்டச்செலவில் Script error: No such module "convert". தொலைவு விரைவுச்சாலைகளை உருவாக்கிட ஏற்பளிப்பு
  • கட்டம் VII: திசம்பர் 2007இல், 167 பில்லியன் திட்டச்செலவில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க தேர்ந்தெடுத்த தேசியச்சாலைகளில் வட்டச்சாலைகள், புறவழிச்சாலைக்ள, மேற்பாலங்கள் கட்டமைக்க ஏற்பளிப்பு

இந்தத் திட்டங்களின் நிகழ்நிலை மற்றும் முன்னேற்றத்தை ஆணையத்தின் வலைத்தளம் அவ்வப்போது இற்றைப்படுத்துகிறது.

வடகிழக்கு மண்டலத்திற்கான சிறப்பு விரைவுச்சாலை மேம்பாட்டுத்திட்டத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமே மேலாண்மை செய்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வடகிழக்கு மாநிலங்களின் தலைநகர்களை ஒன்றுடன் ஒன்று இருவழி அல்லது நான்குவழிச் சாலைகளாக மேம்படுத்தப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. 1.0 1.1 [1] பரணிடப்பட்டது 2016-02-04 at the வந்தவழி இயந்திரம் NHAI Official Website
  2. [2] பரணிடப்பட்டது 2016-02-08 at the வந்தவழி இயந்திரம் NHAI Official Website
  3. "SARDP-NE" (PDF). June 15, 2011 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வார்ப்புரு:இந்திய ஆணையங்கள்