இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox airport

இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் (Indira Gandhi International Airport, வார்ப்புரு:Airport codes)இந்தியத் தேசிய தலைநகர் வலயத்தில் அமைந்துள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். புது தில்லியின் மையப் பகுதியிலிருந்து Script error: No such module "convert". தொலைவில் தென்மேற்கு தில்லியில் அமைந்துள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவாகப் பெயரிடப்பட்டுள்ள இந்த வானூர்தி நிலையம் இந்தியாவின் மிகவும் நெருக்கடிமிக்க வானூர்தி நிலையமாகும்.[1] புதியதாக கட்டப்பட்டுள்ள மூன்றாம் முனையத்தின் செயலாக்கத்திற்கு பிறகு இதுவே இந்தியாவினதும் தெற்காசியாவினதும் மிகப் பெரிய வானூர்தி நிலையமாக விளங்குகிறது. தற்போது 46 மில்லியன் பயணிகளை கையாளுகின்ற இந்த நிலையம் 2030ஆம் ஆண்டில் 100 மில்லியன் பயணிகளை கையாளும் என மதிப்பிடப்படுகிறது. இதுவும் மும்பையின் சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையமும் இணைந்து தெற்கு ஆசியாவின் வான் போக்குவரத்தில் பாதியளவை கையாள்கின்றன.[2][3][4] இதனை பன்னாட்டு இடைவழி மையமாக மாற்ற இதன் இயக்கு நிறுவனம் தில்லி பன்னாட்டு வானூர்தி நிலைய நிறுவனம் (DIAL) திட்டமிட்டுள்ளது.[5]

5220 ஏக்கராப் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தில்லி வானூர்தி நிலையம் தேசிய தலைநகர் வலயத்திற்கான முதன்மை குடியியல் பறப்பியல் மையமாக விளங்குகிறது. முன்னதாக இந்திய வான்படையால் இயக்கப்பட்டு வந்த இந்த நிலையத்தின் மேலாண்மை இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையத்திற்கு மாற்றப்பட்டது.[6] மே 2006 இல் இந்த ஆணையம் வானூர்தி நிலையத்தை புதுப்பித்து இயக்குவதற்காக தில்லி பன்னாட்டு வானூர்தி நிலைய நிறுவனத்திற்கு கொடுத்தது. இது ஜிஎம்ஆர் குழுமத்தின் கூட்டு நிறுவனமாகும்.[7]

2011இல் உலகில் 34வது நெருக்கடிமிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆண்டில் 34,729,467 பயணிகள் பயணித்த இந்தப் போக்குவரத்து முந்தைய ஆண்டினதை விட 17.8% கூடுதலாகும்.[8]

வானூர்திச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வானூர்திச் சேவைகள் சேரும் இடம் குறிப்புகள்
ஏர் அரேபியா சார்ஜா பன்னாட்டு வானூர்தி நிலையம் [9]
ஏர் அஸ்டானா அல்மாட்டி பன்னாட்டு வானூர்தி நிலையம் [10]
ஏர் கனடா தொராண்டோ, வான்கூவர் [11]
ஏர் சீனா பெய்ஜிங் [12]
ஏர் பிரான்சு பாரிசு [13]
ஏர் இந்தியா அகமதாபாத், அமிருதசரசு, அவுரங்காபாத், பாக்டோக்ரா பகுரைன், பெங்களூர், பேங்காக் - சுவர்ணபூமி

மேற்சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. Delhi Airport busier than Mumbai by 40 flights a day
  2. Saurabh Sinha, TNN, 10 July 2008, 03.54am IST (2008-07-10). "Delhi beats Mumbai to become busiest airport". Timesofindia.indiatimes.com. 2010-08-24 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: multiple names: authors list (link)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Delhi's IGIA edges ahead of Mumbai's CSIA as country's busiest airport". Domain-b.com. 2008-09-01. 2010-08-24 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "Travel Biz Monitor: Mumbai airport gets ready for new innings". 2012-10-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-03-18 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. Business Standard (2011-11-07). "Not a stopover to snub, Delhi now wants to be a transit hub". Business-standard.com. 2012-01-24 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. Why they should stay with the Air Force
  7. Mumbai, Delhi airport management to be handed over to pvt cos
  8. Simon Rogers (2012-05-04). "The world's top 100 airports: listed, ranked and mapped | News | guardian.co.uk". Guardian. 2012-10-29 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  9. "Flight Schedules". Air Arabia. 26 December 2018 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  10. "Timetable". Air Astana. 26 December 2018 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  11. "Flight Schedules". Air Canada. 26 December 2018 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  12. "Flight Timetable". Air China. 26 December 2018 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  13. "Flight Schedule". Air France. 21 ஜனவரி 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 December 2018 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]