இரஞ்சித் சின்கா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox police officer

இரஞ்சித் சின்கா (பிறப்பு 27 மார்ச்சு 1953) இந்தியக் காவல் பணியின் 1974ஆம் ஆண்டுத் தொகுதியைச் சேர்ந்த அதிகாரி ஆவார். தற்போது நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் இயக்குநர் பொறுப்பில் உள்ளார். இந்திய - திபெத் எல்லைக் காவல்படை (ITBP) மற்றும் இரயில்வே பாதுகாப்புப் படைகளில் தலைமை காவல் இயக்குநராக பணி புரிந்துள்ளார். திசம்பர் 2012இல் அடுத்த இரண்டாண்டுகளுக்கு நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் இயக்குநராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் பட்னா, தில்லி பிரிவுகளில் மூத்த நிலைப் பதவிகளில் பணியாற்றி உள்ளார்.

மத்திய சேமக் காவல் படையில் சிறீநகரில் தலைமை ஆய்வாளர் (இயக்கம்) ஆகவும் தில்லியில் தலைமை ஆய்வாளர் (பணியாளர்) ஆகவும் பணியாற்றி உள்ளார். தேசிய மற்றும் பன்னாட்டளவில் பல தூண்டுதல் மிக்க, முதன்மையான புலனாய்வுகளில் ஈடுபட்டுள்ளார். நடுவண் விழிப்புணர்வு ஆணையம் சட்டம் 2003இல் விவரிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளின்படி நடுவண் புலனாய்வு செயலக இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமது பணியின் நிமித்தம் பல்வேறு ஊழல் எதிர்ப்பு அமைப்புக்கள், வருமானவரித் துறை, நடுவண் விழிப்புணர்வு ஆணையம் போன்ற அமைப்புக்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியுள்ளது. இவர் நியமிக்கப்பட்டபோது இவரது தேர்வை பாரதிய ஜனதா கட்சி எதிர்த்தது.

இரஞ்சித் பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியை பட்னாவில் பெற்றார். இவரது தந்தை என்.எஸ். சின்கா பிகார் மாநில அரசில் விற்பனைவரி ஆணையராக பணியாற்றியவர். தாய் மாதுரி சின்கா பட்னாவில் இராசேந்தர் நகரில் வாழ்ந்து வருகிறார்.

மேற்சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=இரஞ்சித்_சின்கா&oldid=1234" இருந்து மீள்விக்கப்பட்டது