இரீட்டா வர்மா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

இரீட்டா வர்மா (Rita Verma)(பிறப்பு: ஜூலை 15, 1953 பாட்னா ) ஓர் இந்திய அரசியல்வாதியும், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய அரசில் முன்னாள் சுரங்க மற்றும் கனிம அமைச்சராக இருந்தார். இவர், தன்பாத்தின் எஸ்.எஸ்.எல்.என்.டி மகளிர் கல்லூரியில் வரலாறு பாட ஆசிரியராக உள்ளார்.

வர்மா பாட்னா பல்கலைக்கழகத்தில் படித்தார். ராஞ்சி பல்கலைக்கழகத்தில் வரலாற்றைக் கற்பித்தார். இவர் பீகாரில் தனபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து 1991இல் பத்தாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே தொகுதியிலிருந்து 1996, 1998, 1999ஆம் ஆண்டுகளில் மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சார்க்கண்டு மாநிலத்திலுள்ள தன்பாத் நகரத்தில் ஒரு வங்கியில் கொள்ளை முயற்சியை எதிர்த்து போராடியபோது உயிர்த் தியாகம் செய்த இந்திய காவல் துறை அதிகாரியான் ரந்தீர் பிரசாத் வர்மாவின் மனைவியாவார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

திருமதி ரீட்டா வர்மா ஒரு கர்ணன் கயஸ்தா குடும்பத்தில் பிறந்தார்.

வகித்த பதவிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  • 1999-2000 சுரங்க மற்றும் கனிம துறை அமைச்சர்
  • 2000 சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்
  • 2000-01 ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
  • 2001-03 மனித வள மேம்பாட்டு அமைச்சர்

இவர் 1996-97 மற்றும் 1998-99 காலங்களில் மக்களவையின் தலைவர்கள் குழு உறுப்பினராகவும், 1998 இல் பாரதிய ஜனதா (பிஜேபி) நாடாளுமன்றக் கட்சியின் கொறடாவாகவும் இருந்தார்

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=இரீட்டா_வர்மா&oldid=1891" இருந்து மீள்விக்கப்பட்டது