இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
இலங்கையின் 8வது நாடாளுமன்றத் தேர்தல், 1977

← வார்ப்புரு:Delink question hyphen-minus 21 சூலை 1977 வார்ப்புரு:Delink question hyphen-minus →

இலங்கை தேசிய அரசுப் பேரவைக்கு 168 இடங்கள்
பெரும்பான்மைக்கு 85 இடங்கள் தேவை
  First party Second party Third party
 
தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா அ. அமிர்தலிங்கம் சிறிமாவோ பண்டாரநாயக்கா
கட்சி ஐக்கிய தேசியக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி இலங்கை சுதந்திரக் கட்சி
தலைவரின் தொகுதி கொழும்பு மேற்கு காங்கேசன்துறை அத்தனகலை
வென்ற தொகுதிகள் 140 18 8
மொத்த வாக்குகள் 3,179,221 421,488 1,855,331
விழுக்காடு 50.92% 6.75% 29.72%

Sri Lankan Parliamentary Election 1977.PNG
தொகுதி வாரியாக வெற்றியாளர்கள். ஐதேக பச்சை, தவிகூ மஞ்சள், ஸ்ரீலசுக நீலம்.

முந்தைய பிரதமர்

சிறிமாவோ பண்டாரநாயக்கா
இலங்கை சுதந்திரக் கட்சி

பிரதமர்-தெரிவு

ஜே. ஆர். ஜெயவர்தனா
ஐக்கிய தேசியக் கட்சி

இலங்கையின் 8வது நாடாளுமன்றத் தேர்தல் 1977 சூலை 21 இல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்தின் தேசிய அரசுப் பேரவைக்கு 168 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது.

பின்னணி[தொகு | மூலத்தைத் தொகு]

பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி அரசு தனது ஆட்சிக்காலத்தில் முன்னெப்போதும் இல்லாது மக்களிடையே செல்வாக்கை இழந்திருந்தது. அவரது பொருளாதாரக் கொள்கை நாட்டில் தொழில் வளர்ச்சி கண்டிருந்தாலும், வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க முடியவில்லை. அரசியலமைப்பின் படி 1975 ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய தேர்தல் 1972 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி நாடாளுமன்ரத்தின் பதவிக்காலம் மேலும் இரண்டாண்டுகள் நீடிக்கப்பட்டது. அரசாங்கத்தின் சிங்களத் தேசியவாதம் மிகப் பலமாகத் தலை தூக்கியதில் தமிழ்ப் பகுதிகளில், குறிப்பாக நாட்டின் வட மாகாணத்தில் அரசியல் குழப்ப நிலை தோன்றியது. நாடு முழுவதும் அவசரகால நிலையை அரசு கொண்டு வந்தது. ஐக்கிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளிடையே பிளவுகள் தோன்றின.

அதே வேளை, 1970 தேர்தலில் படு தோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் செல்வாக்குப் பெற ஆரம்பித்தது. இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலமாகத் தீர்வு காணப்படும் என அது உறுதி அளித்தது. திறந்த பொருளாதாரத்தை முன்னெடுக்கப்போவதாக அறிவித்தது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் பங்கீட்டு அடிப்படையில் இலவசமாக வழங்கப்பட்ட இரண்டு கிலோகிராம் அரிசியை விட மேலதிகமாக எட்டு இறாத்தல் மாவும் இலவசமாக வழங்க அது உறுதி அளித்தது.

பழைய தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழரசுக் கட்சியின் தலைவர் அ. அமிர்தலிங்கம் தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணியை அமைத்து தமிழர் பிரதேசங்களுக்கு தனிநாட்டுக் கோரிக்கை முன்வைத்தனர்.

முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இலங்கையின் வரலாற்றிலேயே முதற் தடவையாக ஐக்கிய தேசியக் கட்சி மூன்றில் இரண்டுக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. அதே வேளையில், இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில், முதற் தடவையாக தமிழர் கட்சி ஒன்று இரண்டாவது அதிகப்படியான இடங்களைக் கைப்பற்றி நடாளுமன்றத்தில் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக வந்தது.

1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் நடத்தப்பட்ட ஒரேயொரு பொதுத் தேர்தல் இதுவேயாகும்[1].

கட்சி வேட்பாளர்கள் வாக்குகள் % இடங்கள்
bgcolor=வார்ப்புரு:United National Party/meta/color ஐக்கிய தேசியக் கட்சி 154 3,179,221 50.92 140
bgcolor=வார்ப்புரு:தமிழர் விடுதலைக் கூட்டணி/meta/color தமிழர் விடுதலைக் கூட்டணி 23 421,488 6.75 18
bgcolor=வார்ப்புரு:Sri Lanka Freedom Party/meta/color இலங்கை சுதந்திரக் கட்சி 147 1,855,331 29.72 8
  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2 62,707 1.00 1
bgcolor=வார்ப்புரு:Lanka Sama Samaja Party/meta/color லங்கா சமசமாஜக் கட்சி 82 225,317 3.61 0
  இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி 25 123,856 1.98 0
  மகாஜன எக்சத் பெரமுன 27 22,639 0.36 0
ஏனையோர் 295 353,014 5.65 1
செல்லுபடியான வாக்குகள் 755 6,243,573 100.00 168
நிராகரிக்கப்பட்டவை
பதிவான மொத்த வாக்காளர்கள்
மொத்த வாக்காளர்கள்1
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 6,667,589
Turnout
மூலம்: Sri Lanka Statistics
1. பல-அங்கத்தவர் தொகுதிகளில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகளை அளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  • "Result of Parliamentary General Election 1977" (PDF). Department of Elections, Sri Lanka. 2011-07-17 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2011-12-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  • "1977 General Election Results". LankaNewspapers.com.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  • "Table 38 Parliament Election (1977)". Sri Lanka Statistics. 10 February 2009.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  • Lua error in package.lua at line 80: module 'Module:Citation/CS1/Suggestions' not found.
  • Lua error in package.lua at line 80: module 'Module:Citation/CS1/Suggestions' not found.

வார்ப்புரு:Sri Lankan elections