உமர் அப்துல்லா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician

ஒமர் அப்துல்லா (வார்ப்புரு:Lang-hi, வார்ப்புரு:Lang-ur), (பிறப்பு 10 மார்ச்சு 1970 ஐக்கிய இராச்சியம்) ஓர் இந்திய காசுமீர அரசியல்வாதி. காசுமீரத்தின் "முதல் குடும்பம்" என அறியப்படும் சேக் அப்துல்லா குடும்பத்தின் வாரிசு.[1][2][3] இந்திய தேசிய காங்கிரசுடன் கூட்டணி அமைத்து சம்மு காசுமீர் மாநிலத்தின் 11வது மற்றும் மிக இளைய முதலமைச்சராக சனவரி 5, 2009 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.[3][4].

இதற்கு முன்னர் சம்மு காசுமீரின் ஸ்ரீநகர் தொகுதியிலிருந்து 14வது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சூலை 23, 2001ஆம் ஆண்டு முதல் திசம்பர் 23, 2002 வரை அடல் பிகாரி வாச்பாய் தலைமையில் அமைந்த தேசிய சனநாயக கூட்டணி அரசில் வெளியுறவுத்துறை இணையமைச்சராகப் பணியாற்றினார். அக்டோபர் 2002வில் அமைச்சுப் பதவியிலிருந்து விலகி கட்சிப்பணியில் கவனம் செலுத்திட விரும்பினார்.[5] பிரதமர் அவரது விலகல் கடிதத்தை ஏற்காது பதவியில் நீடிக்க வற்புறுத்தினார்.ஆயினும் இறுதியில் 23 திசம்பர் 2002 அன்று அவரது விலகல் குடியரசுத்தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[6]

இவரது தாத்தா சேக் அப்துல்லா 1932ஆம் ஆண்டில் காசுமீரின் முதல் அரசியல் கட்சியைத் துவக்கியவர்.1948-53 காலத்தில் சம்மு காசுமீர பிரதம மந்திரியாகவும் பின்னர் 1975 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் முதலமைச்சராகவும் இருந்தவர். இவரது தந்தை பரூக் அப்துல்லாவும் 1982,1986 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் முதலமைச்சராகப் பணியாற்றியவர். இவர்களது வழித்தோன்றலாக உமரும் 1998ஆம் ஆண்டு அரசியலில் ஈடுபட்டு மக்களவைத் தேர்தலில் நான்குமுறை வெற்றி கண்டார். தமது தந்தையிடமிருந்து கட்சித்தலைமையை 2002ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வெளியிணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:S-start வார்ப்புரு:S-off வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-aft வார்ப்புரு:S-end

"https://ta.bharatpedia.org/index.php?title=உமர்_அப்துல்லா&oldid=2052" இருந்து மீள்விக்கப்பட்டது