ஊர்மிளா சிங்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
ஊர்மிளா சிங்
Governor of Himachal Pradesh Urmila Singh.jpg
இமாச்சலப் பிரதேசத்தின் 17வது ஆளுநர்
பதவியில்
25 சனவரி 2010 – 24 சனவரி 2015
முன்னவர் மனோஜ் யாதவ்
பின்வந்தவர் மனோஜ் யாதவ்
மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1993–2003
முன்னவர் தாகுர் தால் சிங்
பின்வந்தவர் ராம் குலாம் உய்கீ
தொகுதி கண்சார்[1]
பதவியில்
1985–1990
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 1, 1960(1960-01-01)
சாப்ரா, பீகார்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) பகவத் சிங்
பிள்ளைகள் 4 (2 மகள், 2 மகன்)
கல்வி இளங்கலைஇளங்கலைச் சட்டம்
As of 13 சூன், 2018
Source: ["Biography:Singh, Urmila" (PDF). Madhya Pradesh Legislative Assembly.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>]

ஊர்மிளா சிங் (6 ஆகத்து 1946 – 29 மே 2018) இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் ஆளுநர். 25 சனவரி 2010 அன்று ஆளுநராக பணியமர்த்தப் பட்டார்.[2]

இளமை[தொகு | மூலத்தைத் தொகு]

ஊர்மிளா சிங் தற்போது சத்தீசுகர் மாநிலத்திலுள்ள இராய்பூர் மாவட்டத்தில் பிங்கேசுவர் சிற்றூரில் பிறந்தவர். மத்திய இந்தியாவின் நிலவுடமை குடும்பமொன்றில் பிறந்த ஊர்மிளாவின் கொள்ளுத் தாத்தா இராசா நட்வர்சிங் ஓர் விடுதலை வீரர். இவர் பிரித்தானியர்களால் தூக்கிலிடப்பட்டார். மற்றும் சில உறவினர்கள் அந்தமான் சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

ஊர்மிளா சிங் இளவயதிலேயே சத்திசுகரின் செராய்பள்ளி அரசர், வீரேந்திர பகதூர் சிங்கிற்கு திருமணம் செய்விக்கப்பட்டார். இவர்களுக்கு ஒரு மகளும் இரு மகன்களும் பிறந்தனர். ஊர்மிளா குடும்ப வாழ்வில் ஈடுபாடுடன் இருந்தார். வீரேந்திர சிங் முதன்மையான காங்கிரசு கட்சித் தலைவரானார். தமது குடும்பம் பல நூற்றாண்டுகளாக ஆண்டுவந்த பகுதிகளில் இருந்த சட்டப் பேரவைத் தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்தியப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தார். இவரது அன்னையாரும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

அரசியல் பணிவாழ்வு[தொகு | மூலத்தைத் தொகு]

மத்தியப் பிரதேசத்தில்[தொகு | மூலத்தைத் தொகு]

தனது கணவரின் அகால மறைவை ஒட்டி அவர் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த அதே தொகுதியில் எழுந்த துணைத்தேர்தலில் போட்டியிட்டு தமது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இத்தொகுதிகளில் பலமுறை தொடர்ந்து வென்று 1985 முதல் 2003 வரை சட்டப் பேரவை உறுப்பினராக பணியாற்றினார்.

பால்வளத்துறை துணை அமைச்சராகவும் (1993–95) சமூகநலத்துறை மற்றும் பழங்குடி நல அமைச்சரவை அமைச்சராகவும் (1998–2003)பொறுப்பாற்றி உள்ளார். 1996 முதல் 1998 வரை மத்தியப் பிரதேச மாநில காங்கிரசு தலைவராகவும் விளங்கினார்.[3]

சத்தீசுகரில்[தொகு | மூலத்தைத் தொகு]

2000ஆம் ஆண்டில் புதிய மாநிலமாக சத்தீசுகர் உருவானது. ஊர்மிளாவின் சட்டப் பேரவைத் தொகுதி புதிய மாநிலத்தில் அமைந்தது. இதனால் 2000 முதல் 2003 வரையான முதல் சத்தீசுகர் சட்டப்பேரவையில் அவர் தானாகவே உறுப்பினரானார். ஆனால் 2003 சட்டப் பேரவை தேர்தல்களில் காங்கிரசு இரு மாநிலங்களிலும் தோல்வியைத் தழுவியது. இதில் ஊர்மிளாவும் தோற்றவர்களில் ஒருவரானார். 2008 தேர்தலிலும் தோல்வி அடைந்தார்.

ஆளுநராக[தொகு | மூலத்தைத் தொகு]

காங்கிரசு கட்சிக்கு இவராற்றிய சேவை மற்றும் சட்டப் பேரவையில் நீண்டகால பட்டறிவு கருதி 2010இல் இவர் இமாச்சலப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[4] 25 சனவரி 2010 அன்று பொறுப்பேற்ற ஊர்மிளாவின் பதவிக்காலம் 24 சனவரி 2015 அன்று நிறைவுற்றது. [5] இவரே இமாச்சலப் பிரதேசத்தின் முதல் பெண் ஆளுநராகும். [6]

இறப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

ஊர்மிளா சிங் 29 மே 2018 அன்று தமது 71 அகவையில் தனியார் மருத்துவமனையில் காலமானார். குடும்பத்தினரின் கூற்றுப்படி அவருக்கு மூளை தொடர்பான சிக்கல்கள் இருந்ததாகவும் சிகிட்சை பயனளிக்காது மரணமடைந்ததாகவும் தெரிகிறது. அவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.[7]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Ghansor assembly election results in Madhya Pradesh". elections.traceall.in. 29 December 2018 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Governor House, Himachal Pradesh, India - Her Excellency The Governor". himachalrajbhavan.nic.in. 24 ஜூலை 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 May 2010 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Urmila Singh takes over as Himachal Governor". இந்தியன் எக்சுபிரசு. 26 January 2010. Archived from the original on 5 மார்ச் 2011. https://web.archive.org/web/20110305135853/http://www.indianexpress.com/news/urmila-singh-takes-over-as-himachal-governor/571738/. 
  4. "Urmila Singh appointed Governor of Himachal Pradesh". The Hindu. PTI. 16 Jan 2010. https://www.thehindu.com/incoming/Urmila-Singh-appointed-Governor-of-Himachal-Pradesh/article16837877.ece. 
  5. Correspondent, HT (27 Jan 2015). "Urmila Singh demits office as HP governor, Kalyan Singh takes additional charge". Hindustan Times. https://www.hindustantimes.com/punjab/urmila-singh-demits-office-as-hp-governor-kalyan-singh-takes-additional-charge/story-GQ48umcItmd7ldlHBwVbKP.html. 
  6. Bodh, Anand (20 January 2015). "Urmila Singh first woman HP governor to complete her term". The Times of India. TNN. https://timesofindia.indiatimes.com/city/chandigarh/Urmila-Singh-first-woman-HP-governor-to-complete-her-term/articleshow/45948914.cms. 
  7. "Former Himachal Pradesh governor Urmila Singh dies at 71". New Indian Express. 2018-05-29. 02-09-2019 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |access-date= (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=ஊர்மிளா_சிங்&oldid=14743" இருந்து மீள்விக்கப்பட்டது