என். கோபாலசாமி அய்யங்கார்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
என். கோபாலசாமி அய்யங்கார்
Gopalaswamy Ayyangar.jpg
இரயில்வேத் துறை அமைச்சர்
பதவியில்
1948 - 1952
பிரதம அமைச்சர், ஜம்மு காஷ்மீர் இராச்சியம்
பதவியில்
1937–1943
அரசர் ஹரி சிங்
பின்வந்தவர் கைலாஷ்நாத் அக்சர்
தனிநபர் தகவல்
பிறப்பு நரசிம்ம கோபாலசாமி அய்யங்கார்
31 மார்ச் 1882
தஞ்சாவூர், சென்னை மாகாணம்
இறப்பு பெப்ரவரி 10, 1953(1953-02-10) (அகவை 70)
சென்னை

திவான் பகதூர் என். கோபாலசாமி அய்யங்கார் (N. Gopalaswami Ayyangar), (31 மார்ச் 1882 – 10 பிப்ரவரி 1953), இவர் முதலில் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் பிரதம அமைச்சராக 1937 - 1943 ஆண்டுகளில் பணியாற்றியவர்.[1]

பின்னர் 562 இந்திய சுதேச சமஸ்தானங்களின் சார்பாக இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 93 உறுப்பினரகளில், ந. கோபாலசாமி அய்யங்காரும் ஒருவராவர். கோபாலசாமி அய்யங்கார், அம்பேத்கர் தலைமையிலான அரசியலமைப்புச் சட்ட வரைவோலை குழுவில் பணியாற்றியவர்.

இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட, கோபாலசாமி அய்யங்கார், இந்திய இரயில்வே மற்றும் போக்குவரத்து அமைச்சகத்தின் அமைச்சராக 1948 - 1952 ஆண்டுகளில் பணியாற்றியவர். [2]

கல்வி மற்றும் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

தஞ்சாவூரில் பிறந்த கோபாலசாமி அய்யங்கார், பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி மற்றும் சட்டக் கல்வியை சென்னையில் முடித்தவர். 1904ல் சிறிது காலம் சென்னை பச்சையப்பா கல்லூரியில் உதவிப்பேரராசிரியராக பணிபுரிந்தார்.

பணிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

1905ல் சென்னை மாகாண குடிமைப் பணியில் 1905 முதல் 1919 முடிய துணை ஆட்சியராகப் பணிபுரிந்தார். 1920 மாவட்ட ஆட்சியராக பதவி உயர்வு பெற்ற பின், 1921ல் உள்ளாட்சி அமைப்புகளின் தலைமைப் பதிவாளராக ஏழாண்டுகள் பணியாற்றினார். இவரது பணிக்காலத்தில் குண்டூர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஊராட்சி அமைப்புகளை நிறுவினார். [3]

1932 முதல் 1937 முடிய சென்னை மாகாண பொதுப் பணித் துறை மற்றும் வருவாய் குழுவின் உறுப்பினராக பணியாற்றினார். இறுதியாக ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் பிரதம அமைச்சராக 1937 முதல் 1943 முடிய பணியாற்றினார். பின்னர் இந்திய அரசியலமப்பு நிர்ணய மன்றத்தின், அம்பேத்கர் தலைமையிலான அரசியலமைப்புச் சட்ட வரைவோலைக் குழுவில் பணியாற்றினார். ஜவகர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவையில் இரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக 1948 முதல் 1952 வரை பணியாற்றினார். பின் 1952 - 1953ல் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.[4]கோபால்சாமி அய்யங்கார் சம்மு காசுமீர் மாநிலத்திற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 கீழ் சிறப்புத் தகுதிகள் பெற்றுக் கொடுத்தவர் ஆவார் [5]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. என். கோபாலசாமி ஐயங்கார்: தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி?
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-05-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-02-06 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. Srinivasan, N. "Village Governments in India".The Far Eastern Quarterly 15.2 (Feb 1956):209.
  4. Lua error in package.lua at line 80: module 'Module:Citation/CS1/Suggestions' not found.
  5. [1]

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]