என். செல்வராஜ்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

என். செல்வராஜ் (N. Selvaraj, இறப்பு: 26 மார்ச் 2019 ) என்பவர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட தி.மு.க மாவட்ட செயலாளராக இருந்தவரும் ஆவார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் 5 மே 1944 அன்று நடராசன் என்பவருக்கு மகனாக பிறந்தார். இவர் பொறியியல் கல்வி கற்று பொறியாளராக தொழில் செய்தவர்.வார்ப்புரு:Cn இவர் 1980இல் நடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1987 முதல் 1993வரை ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக செயலாளராக இருந்தார். 1994 ஆம் ஆண்டு ஆண்டில் வைகோவால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கப்பட்டபோது அவருடன் சென்றார்.

1996இல் மீண்டும் திமுகவில் இணைந்த இவர் தி.மு.க சார்பில் 2006 ஆம் ஆண்டு முசிறி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அ. தி. மு.க. வேட்பாளரான பூனாட்சியை 10,927 வாக்குகளில் தோற்கடித்தார். தி.மு.க. அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு 2006 முதல் 2011 வரை பதவி வகித்தார். பிறகு 2011 சட்டமன்றத் தேர்தலில் மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2016 சட்டமன்றத் தேர்தலின்போது இவர் மீண்டும் மண்ணச்ச நல்லூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விரும்பினார் ஆனால் இவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிமுகவில் இணைந்தார்.

இறப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் மார்ச் 26, 2019 அன்று திருச்சியில் காலமானார்.[2]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "திருச்சி திமுகவில் முன்னாள் அமைச்சர்கள் கோஷ்டி மோதல்". தினபூமி. 5 பெப்ரவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Former Minister N. Selvaraj dead".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>THE HINDU (27 March 2019)
"https://ta.bharatpedia.org/index.php?title=என்._செல்வராஜ்&oldid=2805" இருந்து மீள்விக்கப்பட்டது