எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Organization எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு (Border Roads Organisation) இந்திய எல்லைப்புறச் சாலைகளைப் பராமரிக்கும் அமைப்பாகும். பொது சேம பொறியாளர் படையிலிருந்து எல்லைப்புறச் சாலைகள் பொறியியல் பணி அதிகாரிகளும், இந்தியத் தரைப்படையிலிருந்து தரைப்படை பொறியாளர்களும் சேர்ந்து இவ்வமைப்பு செயல்படுகிறது. இந்திய எல்லைகளில் உள்ள சாலைகளைப் பாதுகாக்கவும், எல்லைப்புற சுரங்கப்பாதைகளை அமைக்கவும் இவ்வமைப்பு பயன்படுத்தப்படுகிறது. பொருளாதாரப் பின்னடைவுள்ள வடக்கு மற்றும் வடகிழக்கு இந்திய எல்லைப் பகுதிகளில் சாலை வசதி அமைக்கிறது. இயற்கை பேரிடர்களைச் சமாளிக்கும் வகையில் சாலைகளை அமைக்கிறது. இமயமலை உச்சியிலும், மேற்கு வங்காள சதுப்பு நிலங்களிலும், தார் பாலைவனப் பகுதிகளிலும் இதன் பணி குறிப்பிடத்தக்கது.[1] இவ்வமைப்பு உயரமான இடத்திலும், சுமார் Script error: No such module "convert". உயரத்திலும் சாலைகள் அமைத்துப் பராமரிக்கிறது. இவ்வமைப்பு அந்தமான் நிக்கோபார் தீவுகள் உட்பட 22 இந்திய மாநிலங்களில் மொத்தம் Script error: No such module "convert". நீள சாலைகளையும், Script error: No such module "convert". நீள பாலங்களையும் பராமரித்து வருகிறது

வரலாறு[தொகு | மூலத்தைத் தொகு]

7 மே 1960ல் எல்லைப்புறச் சாலை மேம்பாட்டு வாரியத்தால் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு தலைமையில் உருவாக்கப்பட்டது. லெப்டினன்ட் ஜெனரல் மதிப்புக் கொண்ட தலைமை இயக்குநர் பி.ஆர்.ஓ.வினை வழிநடத்துகிறார்.[2][3]

பணிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

அமைதிக் காலங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  • எல்லைப்பகுதிகளில் சாலை உள்கட்டமைப்பை அமைத்து பராமரித்தல்
  • எல்லைப்பகுதி மாநிலங்களுக்கு சமூக-பொருளாதாரப் பங்களிப்பு வழங்குதல்

போர்க் காலங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  • கட்டுப்பாட்டு எல்லைகளுக்குச் சாலைத்தொடர்புகளை அமைத்து பராமரித்தல்.
  • மத்திய அரசின் கட்டளைப்படிப் போர்க் காலப் பணிபுரிதல்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. aurora (2008-05-07). "BRO: Bridging gaps, Connecting lives". Sankalp India Foundation. Bangalore, Karnataka, India: Sankalp India Foundation.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Border Roads Organisation". GlobalSecurity.org. Alexandria, Virginia: GlobalSecurity.org. 25 September 2010 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "DG's Message". Border Roads Organisation. Border Roads Organisation. 26 மே 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 May 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>