எஸ். ஏ. டாங்கே

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
சிறீபத் அம்ரித் டாங்கே
Bundesarchiv Bild 183-57000-0274, Berlin, V. SED-Parteitag, 3.Tag.jpg
வடக்கு மும்பை மக்களவைத் தொகுதி தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
ஏப்ரல் 15, 1952 – ஏப்ரல் 4, 1957
முன்னவர் தொகுதி அமைக்கப்பட்டது
பின்வந்தவர் வே. கி. கிருஷ்ண மேனன்
தென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதி தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
ஏப்ரல் 5, 1957 – மார்ச் 31, 1962
முன்னவர் ஜெயசிறீ நெய்ஷாத் ராய்ஜி
பின்வந்தவர் வித்தல் பாலகிருஷ்ண காந்தி
தென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதி தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
மார்ச் 4, 1967 – டிசம்பர் 27, 1970
முன்னவர் வித்தல் பாலகிருஷ்ண காந்தி
பின்வந்தவர் அப்துல் காதெர் சலெபாய் (Abdul Kader Salebhoy)
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth-date
கரஞ்சிகான், மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்சமயம் மகாராட்டிரம், இந்தியா)
இறப்பு வார்ப்புரு:Death-date
மும்பை, மகாராட்டிரம், இந்தியா

எஸ். ஏ. டாங்கே (Shripad Amrit Dange 10 அக்டோபர் 1899–22 மே 1991) இந்திய அரசியல்வாதி, பொதுவுடைமையாளர், மற்றும் தொழிற்சங்கச் செயற்பாட்டாளர் ஆவார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கியவர்களில் முன்னணியாளரும் ஆவார்.[1]

இளமைக்காலம்[தொகு | மூலத்தைத் தொகு]

மகாராட்டிய மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் கரஞ்சிகான் என்னும் சிற்றுரில் 1899ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி பிறந்தார் . டாங்கே கல்லூரியில் பயிலும்போதே போராட்டங்களில் கலந்து கொண்டார்.அவர் 1919ஆம் ஆண்டு பம்பாய் வில்சன் கல்லூரியில் படிக்க ஆரம்பித்தபோது, அங்கே மராத்தி இலக்கியக் கழகத்தை துவக்கினார். மகாத்மா காந்தி தலைமையிலான தேசிய இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட டாங்கே அதில் தீவிர பங்குகொண்டார். வெளிநாட்டில் வாழும்படி நிர்ப்பந்திக்கப்பட்ட பிரபல காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் இந்தியா திரும்பியபோது அவருக்கு பம்பாயில் பிரபல காங்கிரஸ் தலைவர் பாலகங்காதர திலகர் தலைமையில் டாங்கே ஒரு மாபெரும் வரவேற்புக்கு ஏற்பாடு செய்தார். இதைக் கண்ட கல்லூரி நிர்வாகம் அவரை 1920ஆம் ஆண்டு அதிலிருந்து வெளியேற்றியது.

அரசியல் பணிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

1920 ஆம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் லோக மான்ய திலகர், மகாத்மா காந்தி, சுபாசு சந்திரபோசு, சவகர்லால் நேரு போன்ற தலைவர்களுடன் இணைந்து போராடினார்.[2] கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு, போருக்கு எதிரான நடவடிக்கைகள் என பலவாறு குற்றங்கள் சுமத்தப்பட்டு மொத்தம் 16 ஆண்டுகள் சிறையில் இருந்தார். இந்தியா விடுதலை பெற்ற பிறகும் இந்திய அரசியலில் முக்கியப் பங்கு ஆற்றினார்.

பாம்பே சட்ட மன்ற உறுப்பினராகவும் (1946-1951) நாடாளுமன்ற உறுப்பினராக 1957 ஆம் ஆண்டிலும் 1967 ஆம் ஆண்டிலும் பதவி வகித்தார். 1978 வரை இந்தியப் பொதுவுடைமைக் கடசியின் தலைவர் பதவியில் இருந்தார். 1981 இல் அக்கட்சி யிலிருந்து வெளியேற்றப் பட்டார். பின்னர் அனைத்திந்திய பொதுவுடைமைக் கட்சியிலும், அதிலிருந்து விலகி ஒன்றுபட்ட பொதுவுடைமைக் கட்சியிலும் சேர்ந்தார். மகாராட்டிய மாநிலம் உருவாவதில் முன்னிலையில் இருந்து வெற்றி பெற்றார்.

இந்திரா காந்தி பிரகடனம் செய்த நெருக்கடி நிலைமைச் சட்டத்தை ஆதரித்தார்.

எழுத்தாளராக[தொகு | மூலத்தைத் தொகு]

சோசலிஸ்ட் என்னும் வார பத்திரிகையைத் தொடங்கினார். நூல்களும் எழுதியுள்ளார். அவற்றில் காந்தியும் லெனினும், இலக்கியமும் மக்களும், இந்தியா-அடிப்படை பொதுவுடைமை முதல் அடிமைத்தனம் வரை என்பன குறிப்பிடத் தக்கவை.

சோவியத் யூனியனின் விருதான ஆர்டர் ஆப் லெனின் என்னும் விருதினைப் பெற்றார்.

மேற்கோள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:Wikiquote

"https://ta.bharatpedia.org/index.php?title=எஸ்._ஏ._டாங்கே&oldid=2663" இருந்து மீள்விக்கப்பட்டது