ஏ. கே. பிரேமாஜம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
ஏ. கே. பிரேமாஜம்
എ.കെ. പ്രേമജം
ஏ. கே. பிரேமாஜம்
மக்களவை உறுப்பினர்
பதவியில்
1998–2004
முன்னவர் ஓ. பரதன்
பின்வந்தவர் பி. சதிதேவி
தொகுதி வடகரை
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
[பல்லிக்குன்னு, கண்ணூர், கேரளம்
அரசியல் கட்சி இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) கே. இரவீந்திரநாத்
பிள்ளைகள் இருவர்

ஏ. கே. பிரேமாஜம் (A. K. Premajam) (பிறப்பு: டிசம்பர் 8, 1938) ஓர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், சமூக சேவகருமாவார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு | மூலத்தைத் தொகு]

ஏ. கே. பிரேமாஜம், கேரளாவின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பல்லிக்குன்னுவில் பிறந்தார். கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் கீழுள்ள பிராவிடன்ஸ் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகத்தின் கீழுள்ள தலச்சேரி, அரசு பிரன்னென் கல்லூரி, பல்கலைக்கழகக் கல்லூரியின் கீழுள்ள கேரளப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கல்வி பயின்றார். கலைகளில் இவர், முதுகலை பட்டம் பெற்றவர். ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய, இவர் 1991 முதல் 1994 வரை கோழிக்கோடு அரசு கலைக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

இவர், தனது அரசியல் வாழ்க்கையை கோழிக்கோடு மாநகராட்சியின் நகரத் தந்தையாகத் தொடங்கினார். இவா 1995 முதல் 1998 வரையும், பின்னர் 2010 முதல் 2015 வரையும் பதவியிலிருந்தார். இவர் 1998 இல் பன்னிரெண்டாவது மக்களவைக்கும், 1999இல் பதிமூன்றாவது மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் உணவுக்கான அத்தியாவசியக் குழுவில் உறுப்பினராக இருந்தார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் மகளிர் மற்றும் ஆலோசனைக் குழுவின் கூட்டுக் குழுவில் உறுப்பினராக இருந்தார். அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினராகவும் உள்ளார். [2]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Lok Sabha: Members". Government of India. 7 அக்டோபர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 மார்ச்சு 2013 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Lok Sabha: Members". Government of India. 20 நவம்பர் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 மார்ச்சு 2013 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=ஏ._கே._பிரேமாஜம்&oldid=2094" இருந்து மீள்விக்கப்பட்டது