காங்கேயம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
காங்கேயம்
—  இரண்டாம் நிலை நகராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
வட்டம் காங்கேயம்
ஆளுநர் {{#property:p35|from=Q1445}}[1]
முதலமைச்சர் {{#property:p6|from=Q1445}}[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். எஸ். வினீத், இ. ஆ. ப [3]
நகராட்சி தலைவர்
சட்டமன்றத் தொகுதி காங்கேயம்
சட்டமன்ற உறுப்பினர்

எம். பி. சாமிநாதன் (திமுக)

மக்கள் தொகை 32,147 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

காங்கேயம் (ஆங்கிலம்:Kangeyam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில உள்ள காங்கேயம் வட்டம் மற்றும் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இவ்வூரைச் சேர்ந்த காளைகள் புகழ்பெற்றவை. இவை காங்கேயம் காளைகள் எனப்படுகின்றன.

காங்கேயம் காளை[தொகு | மூலத்தைத் தொகு]

காங்கேயம் காளை காங்கேயத்தை பூர்விகமாகக் கொண்ட நாட்டு மாட்டு இனமாகும். இவை கடும் வறட்சி காலங்களிலும் தன்னை தகவமைத்து வலிமையோடு வாழும் சிறப்பு கொண்டது. இவை குறுகிய, தடித்த, வலுவான கால்களும், குறுகிய கழுத்தும், உறுதியான கொம்பும் சிறிய உடல் ஆகியவற்றைக் கொண்ட காளைகள் ஆகும். மேலும் இவை பொதுவாக சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும்.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 9,449 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 32,147ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 85.1%மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2811 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 893 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,000 மற்றும் 23 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 88.86% , இசுலாமியர்கள் 6.22% , கிறித்தவர்கள் 3.91% மற்றும் பிறர் 1.01% ஆகவுள்ளனர்.[4]

போக்குவரத்து[தொகு | மூலத்தைத் தொகு]

காங்கேயம் நகராட்சி போக்குவரத்தை பொறுத்தவரை முக்கிய பங்காற்றுகிறது. காங்கேயத்தில் இருந்து கோயம்புத்தூர், பல்லடம், சூலூர், பொங்கலூர், திருப்பூர், பழநி, தாராபுரம், முத்தூர், வெள்ளக்கோயில், கரூர், திருச்சி, குளித்தலை, வேளாங்கண்ணி, தஞ்சாவூர், திருவாரூர், கும்பகோணம், ஈரோடு, சென்னிமலை, பொள்ளாச்சி, அரச்சலூர், அரியலூர், மணப்பாறை,பெருந்துறை, கோபி உள்ளிட்ட முக்கியப் பகுதிகளுக்கு பேருந்துப் போக்குவரத்து சேவை உள்ளது.

காங்கேயம் நகராட்சி தேர்தல் (2022)[தொகு | மூலத்தைத் தொகு]

  • அதிமுக - 4
  • திமுக - 10
  • காங்கிரஸ் - 1
  • சுயேச்சை - 3

பயன்பாடுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

கங்கேயத்தில் 54 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை உள்ளது. நான்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் காங்கயம் சுகாதாரத் தொகுதியின் நிர்வாகத்தின் கீழ் உள்ளன, இது திருப்பூர் சுகாதார பிரிவு மாவட்டத்தால் (HUD) நிர்வகிக்கப்படுகிறது. இவை தவிர, நகரத்தில் ஏராளமான தனியார் மருத்துவமனைகள் உள்ளன. பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் காங்கேயத்திலும் அதைச் சுற்றியும் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:மேற்கோள்பட்டியல்

வார்ப்புரு:திருப்பூர் மாவட்டம்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. நகர மக்கள்தொகை பரம்பல்
"https://ta.bharatpedia.org/index.php?title=காங்கேயம்&oldid=14509" இருந்து மீள்விக்கப்பட்டது