கி. தனவேல்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:தகவற்சட்டம் நபர்

கி. தனவேல் என்பவர் ஒரு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மற்றும் தமிழ் கவிஞர். கடலூர் மாவட்டம் புதுகூரைப்பேட்டை என்கிற ஊரைச் சேர்ந்த இவர் தற்போதுவார்ப்புரு:When சென்னையில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவர் கி. தனவேல் மற்றும் பொன்தனா என்கிற பெயர்களில் கவிதை நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

கல்வி[தொகு | மூலத்தைத் தொகு]

வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்த இவர் தனது தொடக்கக் கல்வியை புதுக்கூரைப்பேட்டை தொடக்கப் பள்ளியிலும், உயர்நிலைக்கல்வியை விருத்தாசலம், அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியிலும் படித்தார். விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசினர் கலைக்கல்லூரியில் புதுமுக வகுப்பினையும் (1972), சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் வேதியியல் பாடப்பிரிவில் இளநிலைப் பட்டமும் (1973 - 1976), சென்னை சட்டக் கல்லூரியில் சட்டத்தில் இளநிலைப் பட்டமும் (1976 - 1979) மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மூலம் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், புதுடெல்லி, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மையில் முதுநிலைப் பட்டமும் பெற்றிருக்கிறார்.

அரசுப்பணி[தொகு | மூலத்தைத் தொகு]

சென்னை சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரே காலத்தில், இவர் தமிழ்நாடு அரசின் இரண்டாம் குழுப் பணியிடத்துக்கும், வங்கிப் பணிக்கும் தேர்வு செய்யப்பட்டார். வங்கிப் பணியில் சேர்ந்து ஆறு ஆண்டு காலம் (1979-85) பணியாற்றி வங்கி அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார். அதன் பின்னர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் (குழு ஒன்றுப் பணியிடம்) துணை ஆட்சியராகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து வங்கிப் பணியிலிருந்து விலகி 1985 ஆகஸ்ட் மாதம் தஞ்சாவூர் மாவட்டத்தில் துணை ஆட்சியராகத் தனது அரசுப் பணியை தொடங்கினார். அதன் பின்னர் கீழ்க்காணும் பதவிகளையும் வகித்து வந்துள்ளார்.

  1. வருவாய்க் கோட்ட அலுவலர், நாமக்கல் மாவட்டம்
  2. மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்
  3. மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலர், வேலூர் மாவட்டம்
  4. முதுநிலை மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்
  5. மாவட்ட வருவாய் அலுவலர், தஞ்சாவூர் மாவட்டம்
  6. தனி அலுவலர், கூட்டுறவு சர்க்கரை ஆலை, அலங்காநல்லூர், மதுரை மாவட்டம்

இந்திய ஆட்சிப்பணி[தொகு | மூலத்தைத் தொகு]

1996 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு சென்னை வணிக வரித்துறையில் துணை ஆணையராகப் பதவி ஏற்றார். அதன் பிறகு 1998 முதல் 2001 வரை 3 ஆண்டுகளுக்கு மேல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவராக பதவி வகித்தார். அதன் பிறகு

  1. இணை ஆணையர், வருவாய் நிர்வாகம், சென்னை
  2. இயக்குர், தோட்டக் கலைத் துறை, சென்னை
  3. அரசு இணைச் செயலர், கூட்டுறவுத் துறை
  4. அரசுச் செயலாளர், வருவாய்த்துறை
  5. அரசுச் செயலாளர், பொதுப்பணித்துறை [1]
  6. உறுப்பினர் - செயலாளர், மாநிலத் திட்டக் குழு [2]
  7. மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்
  8. தற்போது தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அரசுச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.[3]
  • இவர் நடுவண் அரசின் சுகாதாரத் துறை அமைச்சரின் தனிச்செயலாளராக 2004 முதல் 2009 வரை பணியாற்றியுள்ளார்.

எழுதியுள்ள நூல்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. வழி விடுங்கள் (கவிதைத் தொகுப்பு - முதல் பதிப்பு - மே, 1996, இரண்டாம் பதிப்பு - செப்டம்பர், 2012)
  2. வேணுகானம் (கவிதைத் தொகுப்பு - செப்டம்பர், 2012)
  3. தேவதை உலா (கவிதைத் தொகுப்பு - செப்டம்பர், 2012)
  4. செம்புலச் சுவடுகள் (கவிதைத் தொகுப்பு - ஆகஸ்ட், 2013)

சொற்பொழிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

அரசு அலுவலராக பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய காலத்தில் குறிப்பாக நாமக்கல், வேலூர், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பணியாற்றிய காலத்தில் பல்வேறு இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டு கவிதைகள் மற்றும் கட்டுரைகள் வாசித்துள்ளார். மேலும், தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழர் பண்பாட்டு வரலாறு குறித்த பல்வேறு தலைப்புகளில் உரையாற்றியுள்ளார்.

வானொலி உரை[தொகு | மூலத்தைத் தொகு]

திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலையங்கள் மூலம் இவரது இலக்கிய உரைகள் ஒலிபரப்பப்பட்டுள்ளன.

பாராட்டும் பட்டமும்[தொகு | மூலத்தைத் தொகு]

இவருடைய தமிழ் இலக்கிய உரைகளுக்காக முன்னாள் துணை வேந்தர்களான முனைவர் க.ப. அறவாணன், முனைவர் வா.செ. குழந்தைசாமி, முனைவர் ஔவை நடராசன், முனைவர் பொற்கோ மற்றும் முனைவேர் கருணாகரன்ஆகியோர்களால் பாராட்டப் பெற்றுள்ளார்.

சிறப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

தமிழ் தட்டச்சுப் பொறியின் விசைப் பலகையில் நடைமுறைக்குத் தேவையான பல்வேறு குறியீடுகள் இல்லாத நிலையை ஆராய்ந்து இவர் அரசுக்கு அனுப்பிய கருத்துரு தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அரசாணை மூலம் தமிழ் தட்டச்சுப் பொறிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

விருதுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

அரசு விருதுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. தமிழ் தட்டச்சுப் பொறியின் விசைப்பலகையில் எழுத்துச் சீரமைப்புக்காக தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது (1997)
  2. சிறந்த அரசுப் பணிக்காக (மாவட்ட ஆட்சியர் - திருநெல்வேலி) மூன்று விருதுகள் (1998 - 2001)
  3. தமிழ்நாடு தொடர் கல்வி வாரியத்தின் மூலம் எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு எழுத்தறிவு புகட்டும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட அறிவொளி இயக்கத்தினை திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக மாநில அளவிலான டாக்டர். மால்கம் எஸ்.ஆதிசேஷய்யா விருது (1999 – 2000).

அமைப்புகளின் விருதுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  • தென்காசி திருவள்ளுவர் கழகத்தினரால் இவருக்கு தமிழ் முகில் என்ற பட்டம், முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்களால் வழங்கப்பட்டது.வார்ப்புரு:சான்று தேவை
  • இளையோர் எழுச்சி ஆண்டு 2000 - தேசிய இளையோர் தினவிழாவில் நெல்லை வடக்கு ரோட்டரி சங்கம் இளைய பாரதி விருது வழங்கியது.வார்ப்புரு:சான்று தேவை

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=கி._தனவேல்&oldid=1146" இருந்து மீள்விக்கப்பட்டது