குல்சாரிலால் நந்தா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:தகவற்சட்டம் தலைவர்கள்

Gulzarilal Nanda (cropped).jpg

குல்சாரிலால் நந்தா (Gulzarilal Nanda; 4 ஜூலை 1898 – 15 ஜனவரி 1998) இந்திய அரசியல்வாதியும், தொழிலாளர் சிக்கலில் நிபுணத்துவம் பெற்ற பொருளாதார அறிஞரும் ஆவார். இவர் இரண்டு முறை தலா 13 நாட்கள் இந்தியாவின் இடைக்கால பிரதமராக இருந்துள்ளார். 1964 ல் ஜவகர்லால் நேரு இறந்தபொழுது முதல் முறையும், 1966 ல் லால் பகதூர் சாஸ்திரி இறந்தபொழுது இரண்டாவது முறையும் இடைக்கால பிரதமராக பதவி வகித்தார்.

இவர் காந்தியின் கொள்கைகளை கடைபிடிக்கும் காந்தியவாதி ஆவார். இந்திய அரசு இவருக்கு 1997ல் பாரத ரத்னா விருது கொடுத்து கௌரவித்தது.

நந்தா ஜீலை 4, 1898 ல் பஞ்சாப் மாகாணத்திலுள்ள சியால்கோட் என்னுமிடத்தில் இந்து கட்ரி குடும்பத்தில் பிறந்தார். சியால்கோட் தற்போது பாகிஸ்தான் பஞ்சாபில் உள்ளது. நந்தா லாகூர், ஆக்ரா மற்றும் அலகாபாத் நகரங்களில் படித்தார்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:மேற்கோள்பட்டியல்

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:Prime Ministers of India வார்ப்புரு:பாரத ரத்னா வார்ப்புரு:பத்ம விபூசண் விருதுகள்

"https://ta.bharatpedia.org/index.php?title=குல்சாரிலால்_நந்தா&oldid=1055" இருந்து மீள்விக்கப்பட்டது