கெரக்சன்சு கார்ப்புரேசன் ஒப் அமெரிக்கா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

கெரக்சன்சு கார்ப்புரேசன் ஒப் அமெரிக்கா (Corrections Corporation of America (NYSE: CXW) (CCA)) என்பது ஐக்கிய அமெரிக்காவில் சிறைகளை நடத்தும் ஒரு தனியார் நிறுவனம் ஆகும். பல சிறைகளை இது சொந்தமாக வைத்திருக்கிறது, பிறவற்றை ஒப்பந்த அடிப்படையில் இது நடத்துகிறது. சுமார் 60 வரையான சிறைகளை இது நடத்துகிறது.

விமர்சனங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

நபர்களை சிறை வைப்பதே இவர்களின் வணிக மாதிரியாக இருப்பதால், அதிக நபர்களை சிறை வைக்கும் சட்டங்களை இவர்கள் ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். போதைக்கு எதிரான போர் போன்ற மிகவும் சர்ச்சைக்குரிய சட்டங்கள் மூலம் பெரும்பான்மையானோர் கைதிகள் ஆகிறார்கள். இந்த வணிக மாதிரி உலகின் 25% சிறைக் கைதிகள் ஐக்கிய அமெரிக்காவில் இருக்க ஒரு காரணம் ஆகிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது.

சட்டமீறிய குடிவந்தவர்களை சிறையில் வைத்திருப்பதும் இவர்களுக்கு இலாபம் ஈட்டுவதாகும். ஆகையால் அத்தகைய சட்டங்களுக்கும் இவர்கள் சார்பாகப் பரப்புரை செய்கிறார்கள்.