கேசரிநாத் திரிபாதி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
West Bengal Governor meets PM Modi.jpg

கேசரிநாத் திரிபாதி (பிறப்பு : நவம்பர் 10, 1934) இந்திய அரசியல்வாதியும் முன்னாள் மேற்கு வங்க ஆளுநரும்[1] ஆவார். முன்னதாக உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப்பேரவைத் தலைவராகவும் உத்தரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.

தனி வாழ்கை[தொகு | மூலத்தைத் தொகு]

உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தில் நவம்பர் 10, 1934இல் பண்டிதர் அரீசு சந்திர திரிபாதிக்கும் திருமதி சிவ தேவிக்கும் மகனாகப் பிறந்தார். சுதா திரிபாதியை மணந்துள்ள இவருக்கு மூன்று மக்கள் உள்ளனர். இவர் அலகாபாத்தில் வசித்து வருகிறார்.

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு ஐந்து முறை, 1977–1980, 1989-1991,1991-1992,1993-1995, 1996–2002, 2002–2007, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உ.பி சட்டப்பேரவைத் தலைவராக 1991–1993, 1997–2002 மற்றும் மே 2002 - மார்ச் 2004 காலங்களில் பொறுப்பாற்றியுள்ளார். 1977-1979இல் ஜனதா கட்சியின் உ.பி அமைச்சரவையில் நிறுவன நிதியம் மற்றும் விற்பனை வரி அமைச்சராகப் பணிபுரிந்துள்ளார். உ. பி. சட்டப்பேரவையின் தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர் மட்டுமே .[<span title="Script error: No such module "delink".">சான்று தேவை] சூலை 14, 2014 அன்று மேற்கு வங்காள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.[1][2]

மற்றப் பணிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார். எழுத்தாளரும் கவிஞருமான கேசரிநாத் பல நூல்களை வெளியிட்டுள்ளார். இவற்றில் முதன்மையானவை 'மனோனுக்கிருதி' மற்றும் 'ஆயு பாங்க் என்ற கவிதைத் தொகுப்புகளாகும். தொழில்முறையாக மக்கள் பிரதிநிதிகள் சட்டம், 1951 குறித்த இவரது விளக்கவுரை பெரிதும் அறியப்பட்டது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடைபெறும் இந்திக் கவிஞர்களின் சம்மேளனங்களில் கலந்து கொள்கிறார்.

மேற்சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. 1.0 1.1 "New Governors of UP, Bengal, Chhattisgarh, Gujarat and Nagaland named". IANS. news.biharprabha.com. 14 சூலை 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்". தினகரன். 14 சூலை 2014. 15 சூலை 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=கேசரிநாத்_திரிபாதி&oldid=14822" இருந்து மீள்விக்கப்பட்டது