கே. கே. நகர், மதுரை

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Short description

கே. கே. நகர், மதுரை
கலைஞர் கருணாநிதி நகர்
புறநகர்ப் பகுதி
Script error: No such module "Location map".
ஆள்கூறுகள்: Script error: No such module "ISO 3166".
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்158 m (518 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்கள்625020
தொலைபேசி குறியீடு0452xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, செல்லூர் தல்லாகுளம், கோரிப்பாளையம், வண்டியூர், கருப்பாயூரணி ஊராட்சி, அண்ணா நகர், செனாய் நகர், சின்ன சொக்கிகுளம்
மாநகராட்சிமதுரை மாநகராட்சி
இணையதளம்https://madurai.nic.in

கே. கே. நகர் (K. K. Nagar) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில், 9°57'34.9"N, 78°09'18.0"E (அதாவது, 9.959700°N, 78.155000°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 158 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். (தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்) கலைஞர் கருணாநிதி (Kalaignar Karunanidhi) நகர் என்பதின் சுருக்கமே கே. கே. (K. K.) நகர். மதுரை, செல்லூர் தல்லாகுளம், கோரிப்பாளையம், கருப்பாயூரணி ஊராட்சி, வண்டியூர், அண்ணா நகர், சின்ன சொக்கிகுளம் மற்றும் செனாய் நகர் ஆகியவை கே. கே. நகர் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும். கே. கே. நகர் பகுதியிலிருந்து முறையே சுமார் 2 கி.மீ. தொலைவில் மதுரை எம்.ஜி.ஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் மதுரை - அண்ணா பேருந்து நிலையம் ஆகியவை அமைந்துள்ளன. மதுரை - ஆரப்பாளையம் பேருந்து நிலையம் சுமார் 5.5 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது. இங்கிருந்து சுமார் 4.5 கி.மீ. தூரத்தில் மதுரை - பெரியார் பேருந்து நிலையம் உள்ளது. மேலும், எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம், இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் அமையப் பெற்றுள்ளது. கே. கே. நகர் பகுதியிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் அவனியாபுரம் பகுதியில் மதுரை வானூர்தி நிலையம் சிறப்புற அமைந்துள்ளது.

விகாசா பொது பள்ளி மற்றும் மகாத்மா மாண்டிசோரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆகியவை இங்குள்ள முக்கியமான பள்ளிகளாகும்.

மருத்துவ வசதிகள் அதிகம் கொண்ட அருகிலுள்ள அரசு மருத்துவமனை கோரிப்பாளையம் பகுதியிலுள்ள அரசு இராசாசி மருத்துவமனை ஆகும்.[1] தனியார் அப்போலோ மருத்துவ குழுமத்தின் அப்போலோ மருத்துவமனை, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மதுரையின் கே. கே. நகரில் 300 படுக்கை வசதிகளுடன் 1997 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.[2]

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கே. கே. நகர் பகுதியில் அமைந்துள்ளது. கே. கே. நகரின் மதுரை நீதிமன்றத்திற்கு அருகில், மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம். ஜி. ஆர்.-இன் நினைவாக 2001 ஆம் ஆண்டில் அவரது உருவில் வெண்கலச் சிலை ஒன்றும், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 2919 ஆம் ஆண்டில் அவரது உருவில் வெண்கலச் சிலை ஒன்றும் நிறுவப்பட்டு, அவர்களது நினைவாக பிறந்த நாட்கள் மற்றும் நினைவு நாட்கள் அவர்களது தொண்டர்களால் அனுசரிக்கப்படுகின்றன.[3]

கே. கே. நகரின் முக்கியமான பொழுதுபோக்கு பூங்காக்களாக, சுந்தரம் பூங்கா[4] மற்றும் குழந்தைகள் அறிவியல் பூங்கா[5] ஆகியவை அமைந்துள்ளன. ஈ. வெ. ரா. பெரியார் நூற்றாண்டு நினைவு ஆண்டில் தோரண வாயில் ஒன்று கே. கே. நகரில் உருவாக்கப்பட்டு, இவ்வூரின் அடையாளமாக விளங்குகிறது.

டாடா குழுமத்தின் டைடன் இன உடைகள் பிரிவான டானீரா (Taneira) தனது முதல் காட்சியறையை, 2022 ஆம் ஆண்டு அக்டோபரில், கே. கே. நகர் பகுதியில் துவங்கியது.[6]

இங்குள்ள கற்பக விநாயகர் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.[7]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. மாலை மலர் (2022-12-06). "மதுரை அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் இல்லை" (in ta). https://www.maalaimalar.com/news/district/madurai-news-there-is-no-artificial-insemination-center-in-madurai-government-hospital-545482. 
  2. "Hospitals In Madurai". Apollo Hospitals (in English). 2022-12-23 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "மதுரையில் எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு... போலீசார் தீவிர விசாரணை!". News18 Tamil. 2022-12-21. 2022-12-23 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. Staff Reporter (2021-08-25). "Parks in Madurai city slowly come back to life". The Hindu (in English). 2022-12-23 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. TNN / (2022-06-20). "Children's Science Park Inaugurated". The Times of India (in English). 2022-12-23 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. The Hindu Bureau (2022-10-11). "Titan company’s ethnic wear brand Taneira launched in Madurai" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Madurai/titan-companys-ethnic-wear-brand-taneira-launched-in-madurai/article65997924.ece. 
  7. "Arulmigu Karpaga Vinayagar Temple, K K Nagar, Madurai - 625020, Madurai District [TM032072].,karpaga vingayagar,karpaga vinayagar". hrce.tn.gov.in. 2022-12-23 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=கே._கே._நகர்,_மதுரை&oldid=18479" இருந்து மீள்விக்கப்பட்டது