கே. சி. பழனிசாமி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician

கே. சி. பழனிசாமி (பிறப்பு: 7, திசம்பர், 1959 சென்னிமலை ஈரோடு மாவட்டம்) என்பவர் இந்திய தமிழ் அரசியல்வாதி மற்றும் இந்திய இந்திய நாடாளுமன்றத்தின் திருச்செங்கோடு தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக கழகம் கட்சியைச் சேர்ந்வர். மேலும் இவர் தமிழ்நாடு சட்டமன்ற காங்கேயம் தொகுதி முன்னாள் உறுப்பினராவார். தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டம் சென்னிலையில் பிறந்த இவர் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் பொறியியல் பயின்றார். 1972 ஆம் ஆண்டில், எம்.ஜி.ஆர் அதிமுக கட்சியைத் தொடங்கியபோது, இவர் தனது 13 வயதில் கட்சி உறுப்பினராக சேர்ந்தார். 1983 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிமுகவின் எம்.ஜி.ஆர் இளைஞரணிக்கு 23 வயதில் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு சுமார் 16,000 வாக்கு வித்தியாசத்தி தேர்தலில் வெற்றி பெற்றார். தனது 24 வயதில் தமிழக சட்டமன்ற உறுப்பினராக அமர்ந்த இளைய நபர் என்ற பெருமையை பெற்றார். 1989 ஆம் ஆண்டு தேர்தலில், தென்னிந்தியாவில் அதிக வாக்கு வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்று திருச்செங்கோடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

குறிப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=கே._சி._பழனிசாமி&oldid=1732" இருந்து மீள்விக்கப்பட்டது