கைகலா சத்ய நாராயணா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox person கைகலா சத்தியநாராயணன் (Kaikala Satyanarayana) (பிறப்பு 25 சூலை 1935) ஒரு இந்திய நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனரும், அரசியல்வாதியுமாவார். தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மச்சிலிபட்டணம் மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதினோராவது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். இவர் பெரும்பாலும் தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றினார். [1]

தெலுங்குத் திரைப்படங்களில் இவரது வாழ்நாள் சாதனைக்காக 2011 இரகுபதி வெங்கய்யா விருதையும், 2017 தென்னிந்திய பிலிம்பேர் விருதையும் பெற்றவர். [2] [3] 59 வது தேசிய திரைப்பட விருதுகளில் இரண்டாம் தென் மண்டலத்துக்கான நடுவர் உறுப்பினராகவும் பணியாற்றினார். [4]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

இவர், கிருட்டிணா மாவட்டத்தில் கவுதாரம் கிராமத்தைச் சேர்ந்த கைகலா இலட்சுமி நாராயணன் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். குட்லவல்லேருவில் ஆரம்பக் கல்வியையும், விசயவாடாவில் இடைநிலைக் கல்வியையும் முடித்த சத்யநாராயணன், குடிவாடா கல்லூரியில் பட்டம் பெற்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் ஏப்ரல் 10, 1960 அன்று நாகேசுவரம்மா என்பவரை மணந்தார். தம்பதியருக்கு இரண்டு மகள்களும் இரண்டு மகன்களும் உள்ளனர். [5] [6]

தொழில்[தொகு | மூலத்தைத் தொகு]

1959 ஆம் ஆண்டில் சங்கய்யா என்பவர் இயக்கிய சிப்பாய் கூத்துரு என்றத் திரைப்படத்தில் இவரது அறிமுகம் இருந்தது. இது சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், இவர் என். டி. ராமராவ் போன்றே இருந்ததால் அனைவராலும் கவனிக்கப்பட்டார். என். டி. ஆருக்கு மாற்றுக் கலைஞராக நடிக்க ஆரம்பித்தார். சத்யநாராயணன் அந்த இடத்தை பொருத்தமாக தன்னைப் பொருத்தினார். இவர் பல திரைப்படங்களில் என்.டி.ஆருக்கு மாற்றாக (டூப்) நடித்தார். எஸ்.டி லால் இயக்கிய 1960 ல் இவரது படமான அபூர்வா சகஸ்ரா சிராச்சேத சிந்தாமணி என்ற படத்தில் என். டி. ஆர் இவருக்கு ஒரு பாத்திரத்தை வழங்கினார். அதில் இவர் ஒரு இளவரசனாக நடித்தார்.

பி. விட்டலாச்சார்யா இவரை கனகா துர்கா பூஜா மஹிமா என்ற படத்தில் எதிர்மறை வேடத்தில் நடிக்க வைத்தார். அப்போதிருந்து, சத்யநாராயணன் தன்னை எதிர்மறை வேடங்களில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். மேலும், ராமா பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி கோடாம சிம்ஹம், பங்காரு குடும்பம், முத்துலா மொகுடு போன்ற படங்களை தயாரித்தார்.

அரசியல்[தொகு | மூலத்தைத் தொகு]

1996 இல், மச்சிலிபட்னம் தொகுதியில் இருந்து மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசக் கட்சியின் மூலம் அவர் அரசியலில் இறங்கினார். [7]

குறிப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Kaikala Satyanarayana to receive NTR award". http://www.indiaglitz.com/channels/telugu/article/35856.html. 
  2. ஈநாடு (நாளிதழ்) daily, Eeenadu Cinema, Page 10, Nandi lifetime achievement awards, retrieved, 24 March 2013.
  3. "Archived copy". 17 June 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 June 2018 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. Gudipoodi Srihari (23 August 2012). "Arts / Theatre : For an artiste, by the artistes". The Hindu. 11 October 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 November 2012 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "Kaikala Satyanarayana Brother's Daughter Marriage – High Resolution Photo Gallery". Ragalahari.com. 13 December 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 November 2012 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. "Kaikala Satyanarayana Open Heart with RK". YouTube. 17 September 2012. 22 August 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 November 2012 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  7. "Archived copy". 7 July 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 July 2019 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=கைகலா_சத்ய_நாராயணா&oldid=2009" இருந்து மீள்விக்கப்பட்டது