கைலாஷோ தேவி சைனி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
கைலாஷோ தேவி சைனி
பாராளுமன்ற உறுப்பினர்
தொகுதி குருச்சேத்திரம் (மக்களவைத் தொகுதி)
தனிநபர் தகவல்
பிறப்பு ஏப்ரல் 4, 1962( 1962-04-04)
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ஓம் நாத் சைனி
தொழில் விவசாயி, அரசியல்வாதி, சமூகசேவகர், ஆசிரியர், வர்த்தகர்
இணையம் kailashosaini.com

கைலாஷோ தேவி சைனி (Kailasho Devi Saini) (பிறப்பு:4 ஏப்ரல் 1962) ஓர் அரசியல்வாதியும் சமூக சேவகருமாவார். இவர் இந்திய மாநிலமான அரியானாவில் உள்ள குருச்சேத்திரம் தொகுதியில் இருந்து இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1]

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்[தொகு | மூலத்தைத் தொகு]

கைலாஷோ, குருச்சேத்திரம் மாவட்டத்தின் பிரதாப்கரில் பிறந்தார். இவர் ஓம் நாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். கைலாஷோ உடற்கல்வி மற்றும் வரலாற்றில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.[1]

தொழில்[தொகு | மூலத்தைத் தொகு]

அரியானாவிலுள்ள யமுனா நகர், குருச்சேத்திரம், கைத்தல் மாவட்டங்களில் உள்ள சாமானியர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க கைலாஷோ செயல்பட்டு வருகிறார். மாணவப் பருவத்தில் கலாச்சார நடவடிக்கைகளில் பங்கேற்றதற்காக இவர் பல விருதுகளை வென்றுள்ளார் .[1]

ஆர்வங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

கைலாஷோவின் ஆர்வத்தில் இசை கேட்பது, தியானம் செய்வது மற்றும் உடற்பயிற்சி செய்வது ஆகியவை அடங்கும்.[1]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Biographical Sketch Member of Parliament 12th Lok Sabha". 22 பிப்ரவரி 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 February 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=கைலாஷோ_தேவி_சைனி&oldid=2060" இருந்து மீள்விக்கப்பட்டது