கொனியேட்டி ரோசையா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
கொனிஜெடி ரோசையா
Konijeti Rosaiah
Konijeti Rosaiah BNC.jpg
13வது தமிழக ஆளுநர்
பதவியில்
31 ஆகஸ்டு 2011 – 30 ஆகஸ்டு 2016
முன்னவர் சுர்சித் சிங் பர்னாலா
பின்வந்தவர் சி. வித்தியாசாகர் ராவ் (கூடுதல் பொறுப்பு)
15வது முதலமைச்சர், ஆந்திரப் பிரதேசம்
பதவியில்
03 செப்டம்பர் 2009 – 24 நவம்பர் 2010
முன்னவர் யெ.சா.ராசசேகர ரெட்டி
பின்வந்தவர் கிரண் குமார் ரெட்டி
தொகுதி குண்டூர்[1](சட்ட மேலவை உறுப்பினர்)
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
வேமூரு, குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் இந்தியா வார்ப்புரு:நாட்டுத் தகவல் INDவார்ப்புரு:Namespace detect showall
இறப்பு 4 திசம்பர் 2021(2021-12-04) (அகவை 88)
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) சிவலட்சுமி
பிள்ளைகள் கே எசு சுப்பாராவ், பி ரமாதேவி, கே எசு என் மூர்த்தி
இருப்பிடம் அமீர்பேட், ஐதராபாத்

கொனிஜெடி ரோசையா (Konijeti Rosaiah, வார்ப்புரு:Lang-te, 4 சூலை, 1933- 4 திசம்பர், 2021) ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஆவார்.[2][3] இந்திய தேசியக் காங்கிரசின் அரசியல்வாதியான அவர் அமைச்சுப் பதவிகளில் இருந்துள்ளார். அவர் மாநில நிதி அமைச்சராகப் பணியாற்றிய பாங்கு பெரிதும் பாராட்டப்பட்டது. ஆந்திராவில் 16 முறை வரவுசெலவு திட்டத்தை தாக்கல் செய்து சாதனை படைத்தவர். கட்சித் தலைமையின் கட்டளைக்கிணங்கி முதல்வர் பணியேற்ற இவர் நவம்பர் 24, 2010 அன்று தமது சொந்தக் காரணங்களுக்காக பதவி விலகினார்.[4] இவரது பதவி விலகலை அடுத்து கிரண்குமார் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.

ஆகத்து 31, 2011 முதல் ஆகத்து 30, 2016 வரை தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணியாற்றினார்.[5]

பதவிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  • 1968, 1974 மற்றும் 1980 ஆந்திர மாநில சட்டப்பேரவை
  • 1977-1979 ஆந்திர மாநிலம் தொழில்துறை உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர்.
  • 1978-1979, 1983-1985 ஆந்திர மாநில சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர்.
  • 1979-1980 ஆந்திர மாநில சாலை மற்றும் கட்டிடத்துறை அமைச்சர்.
  • 1980-1981 ஆந்திர மாநில வீட்டு வசதி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்.
  • 1982-1983 ஆந்திர மாநில உள்துறை அமைச்சராக இருந்தார்.
  • 1989-1990 ஆந்திர மாநில நிதி, மின்சாரம், போக்குவரத்து, உயர்கல்வி, கைத்தறி மற்றும் கதர்துறை, அமைச்சர்.
  • 1991-1992 ஆந்திர மாநில மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்.
  • 1992-1994 ஆந்திர மாநில நிதி, மின்சாரம், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்.
  • 1995-1997 ஆந்திரமாநிலம் காங்கிரஸ் கட்சித் தலைவர்.
  • 1998 நரசரொபேட் மக்களவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்.
  • 2004-2009 ஆந்திர மாநில நிதி, திட்டம்,குடும்ப நலத்துறை அமைச்சர்.
  • 2009-2010 ஆந்திர மாநில முதல்வர்.
  • 2011-2016 தமிழ்நாடு ஆளுநர்.[6][7]

விருதுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

2007 ஆம் ஆண்டு ஆந்திரப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.[8]

மறைவு[தொகு | மூலத்தைத் தொகு]

உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சைபெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி, ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், 2021 திசம்பர் 4 அன்று காலை 8 மணியளவில் உயிரிழந்தார்.[9]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-06-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-12-04 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Rosaiah takes oath as caretaker Andhra CM". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2009-09-03. 2009-09-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-09-03 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=live (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Rosaiah - A low profile leader".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "rosaiah  : ap chief minister k rosaiah : Andhra Pradesh CM Rosaiah resigns : Rosaiah resigns as Andhra Pradesh Chief Minister". BindasLand. 25 நவம்பர் 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 November 2010 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. தமிழக கவர்னராக ரோசய்யா நியமனம் தினமலர் நாளிதழ், பார்க்கப்பட்ட நாள்:ஆகத்து 26, 2011
  6. "டாக்டர். கே. ரோசைய்யா மேதகு ஆளுநர், தமிழ்நாடு". National Informatics Centre. 25 சனவரி 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  7. "Profile of His Excellency Dr. K. Rosaiah Governor of Tamil Nadu". National Informatics Centre. 25 சனவரி 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  8. "Rosaiah sworn in as Andhra CM". தி இந்து. 2009-09-03. http://beta.thehindu.com/news/national/article14639.ece. பார்த்த நாள்: 2009-09-03. 
  9. தமிழ்நாடு முன்னாள் கவர்னர் ரோசய்யா காலமானார்...!. தினத்தந்தி நாளிதழ். 4 டிசம்பர் 2021. https://www.dailythanthi.com/News/India/2021/12/04092607/Former-TN-Governor-Rosaiah-Passed-away.vpf. 

வார்ப்புரு:S-start வார்ப்புரு:S-off வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-aft வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-aft வார்ப்புரு:S-gov வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-aft வார்ப்புரு:S-end

"https://ta.bharatpedia.org/index.php?title=கொனியேட்டி_ரோசையா&oldid=2061" இருந்து மீள்விக்கப்பட்டது