சசி குமார் (கன்னட நடிகர்)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox politician சசி குமார் (Shashi Kumar) (பிறப்பு: திசம்பர் 2, 1965) இந்திய கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகரும் அரசியல்வாதியுமாவார். கன்னடத் திரையுலகில் பிரபலமான நட்சத்திரமான இவர் தமிழ் திரையிலும் காணப்பட்டார். பாட்ஷா படத்தில் இரசினிகாந்துடன் நடித்திருந்தார். கன்னடத் திரையுலகின் மிகச் சிறந்த நாயகர்களில் ஒருவராக இருந்தார். இவர் கன்னட திரையுலகின் "உச்ச நாயகன்" என்று அழைக்கப்படுகிறார்.

நடிப்பு வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

ராகவேந்திரா ராஜ்குமார் நடித்த சிரஞ்சீவி சுதாகரா இவரது முதல் படமாகும். 1989ஆம் ஆண்டில் வீ. ரவிச்சந்திரன் மற்றும் பூனம் தில்லான் நடித்த யுத்த காண்டா படத்தின் மூலம் பிரபலமடைந்தார். மேலும், சிபிஐ சங்கர், சங்லியாயனா 2 போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். 1990ஆம் ஆண்டில் வெற்றிகரமான ராணி மகாராணி, பாரே நன்னா முத்தினா ராணி இவரை கன்னடத் திரையுலகின் சிறந்த நாயகனாக நிறுவியது. பல வெற்றிப் படங்களில் மாலாஸ்ரீயுடன் ஒன்றாக நடித்த இவர், கன்னட படங்களின் எல்லா காலத்திலும் சிறந்த இணைகளில் ஒன்றாக கருதப்படுகிறார்கள். சுதாராணி, தாரா, சௌந்தர்யா, சித்தாரா போன்ற பிரபல நடிகைகளுடன் இவர் நடித்தார்.

இவரது நடிப்பு வாழ்க்கையின் உச்சத்தில், 1990களின் நடுப்பகுதியில் பெங்களூர் அருகே வாகன விபத்துக்குள்ளானார். அடுத்தடுத்த அறுவை சிகிச்சைகள் இவரது தோற்றத்தை மாற்றியமைத்தன. மேலும், பெரிய நிறுவனங்களிலிருந்து இவருக்கான பட வாய்ப்பு நின்று போனது. இது இவரை அரசியலில் கால்பதிக்க செலுத்தியது. 2-3 வருட இடைவெளிக்குப் பிறகு இவர் மீண்டும் நடிக்க வந்தார். முக்கியமாக யஜமானா, ஹப்பா, கனசுகரா, சினேகலோகா, யாரிகே சலுத்தே சம்பாலா போன்ற பல படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து சித்ரதுர்கா மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பதின்மூன்றாவது மக்களவையில் மக்களவை உறுப்பினராக போட்டியிட்டார். இவர் 2006இல் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். சித்ரதுர்கா தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் இவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். [1]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Archived copy". 14 July 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-05-03 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. வழிமாற்று வார்ப்புரு:ஆளுமைக் கட்டுப்பாடு