சியாமா சிங்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
சியாமா சிங்
இந்திய மக்களவை உறுப்பினர்
for அவுரங்காபாத்
பதவியில்
1999–2004
முன்னவர் சுசில் குமார்
பின்வந்தவர் நிகில் குமார்
தொகுதி அவுரங்காபாத் மக்களவைத் தொகுதி
பீகார் பிரதேச காங்கிரசு குழுவின்
துணைத் தலைவர்
பதவியில்
2004–2017
தொகுதி அவுரங்காபாத் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 26, 1942(1942-11-26)
பட்னா, பீகார்
இறப்பு 11 செப்டம்பர் 2017(2017-09-11) (அகவை 74)
தில்லி
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) நிகில் குமார்
இருப்பிடம் தில்லி, பட்னா
As of 7 செப்டம்பர், 2009
Source: [1]

சியாமா சிங் (Shyama Singh) (பிறப்பு 26 நவம்பர் 1942 - 11 செப்டம்பர் 2017) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் [1] பாராளுமன்ற உறுப்பினருமாவார்.[2] அவுரங்காபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டர். இவர்,[3] நாகாலாந்து, கேரளா ஆகிய மாநிலங்களின் ஆளுநராக இருந்த நிகில் குமாரை திருமணம் செய்து கொண்டார். தில்லியில் நடந்த ஒரு சமூக நிகழ்வில் சந்தித்த இந்தியப் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின்[4] முயற்சியால் இவர் காங்கிரசில் சேர்ந்தார். ஒரு பாராளுமன்ற உறுப்பினராக, தனது மாமனாரும் பீகார் முதல்வருமான சத்யேந்திர நாராயண் சின்கா மூலம் நபிநகர் சூப்பர் அனல் மின் திட்டத்தை புத்துயிர் பெற வைத்தார்.[4] சியாமா சிங் பீகாரின் பிரதேச காங்கிரசு குழுவின் துணைத் தலைவராகவும் இருந்தார்.[5]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

சுதந்திர இந்தியாவின் முதல் நிதிச் செயலாளராக பணியாற்றிய[6] இந்தியக் குடிமைப் பணி அதிகாரியான சர் டி. பி. சிங்கிற்கும்,[7] பூர்ணியா மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டு முறை இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மாதுரி சிங்கிற்கும் மகளாகப் பிறந்தார். தனது பள்ளிக்கல்வியை பாட்னாவில் முடித்த இவர் பிறகு, இந்திரபிரஸ்தா மகளிர் கல்லூரியில் வரலாற்றில் பட்டம் பெற்றார். இவரது மூத்த சகோதரர் என்.கே.சிங் (பீகாரின் 1964 தொகுதி இந்திய ஆட்சிப் பணி அதிகாரி)[8] இந்தியாவின் வருவாய் செயலாளராகவும் பிரதமரின் முதன்மை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவருடைய இளைய சகோதரர் உதய் சிங் பீகாரின் பூர்ணியா மக்களவைத் தொகுதியை இரண்டு முறை மக்களவையில் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவரது மாமனாரும், மறைந்த முன்னாள் பீகார் முதல்வர் சத்யேந்திர நாராயண சின்காவும், அவுரங்காபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து [9] ஏழு முறை தொடர்ந்து மக்களவைக்குத் தேர்தெடுக்கப்பட்டர்.

குடும்பம்[தொகு | மூலத்தைத் தொகு]

இவரது கணவர் நிகில் குமார் நாகாலாந்தின் ஆளுநராகவும்,[10][11] கேரள ஆளுநராகவும் பணி புரிந்தார்.[12]

சியாமா சிங் தோட்ட ஆர்வலராவார்.[13][14] பிரம்மாண்டமான தோட்டத்தை சுமார் 30 ஆண்டுகளாக இவரது குடும்பத்தினர் கொண்டிருந்தனர்.[15] தில்லியில் நடைபெறும் அனைத்து மலர் கண்காட்சியிலும் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்[தொகு | மூலத்தைத் தொகு]

சியாமா, ஒரு புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்த இவர்,[4] தனது பாராளுமன்ற தொகுதியில் இவர் பள்ளிகள், மகளிர் கல்லூரி போன்ற பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கினா. மேலும், மாவட்டத்தில் ஒரு புதிய கணினி மையம் அமைக்கப்பட்டது.

மறைவு[தொகு | மூலத்தைத் தொகு]

2017 செப்டம்பர் 17 அன்று உடல்நலக் குறைவு காரணமாக இவர் காலமானார்.[16][5][7][17]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. Lok Sabha Website. "Shyama Singh MP(13th Lok Sabha)". Official Website. 2009-02-04 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "MP-Shyama Singh". Parliament of India. 2009-07-06 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Profyl of nagaland Governor Nikhil Kumar". Nagaland Government. 2009-07-06 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. 4.0 4.1 4.2 "Sisters Under The Skin". www.telegraphindia.com.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. 5.0 5.1 "Former MP Shyama Sinha passes away at 74 in Delhi, to be cremated on Sept 13; Bihar CM mourns death". Hindustan Times. 11 September 2017.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. "Home". The Tribhuvan School. 2017-12-05. 2019-09-12 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  7. 7.0 7.1 "Former Cong MP Shyama Singh passes away".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  8. Prabhu Chawla. "N K Singh:India's supercrat". India Today. 3 ஜனவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 நவம்பர் 2004 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  9. "Goodbye to good life for heirloom". www.telegraphindia.com.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  10. PTI. "ex Delhi Police Chief Nikhil Kumar sworn in as Nagaland Governor". Press Trust of India. 2009-10-15 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  11. The Indian Express. "Constant gardener has left". Official Site. 2006-03-12 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  12. "Nikhil Kumar sworn in as Governor of Kerala". 23 March 2013 – via www.thehindu.com.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  13. "Jaya: the sole exception - Indian Express". archive.indianexpress.com.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  14. The Relegraph. "Shyama Sinha's house-Delhi's best kept garden". Official Site. 2006-03-12 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  15. The Relegraph. "Shyama Sinha's house-Delhi's best kept garden". Official Site. 2006-03-12 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  16. "Former Congress MP Shyama Singh passes away". The New Indian Express.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  17. "Nitish condoles death of former MP Shyama Singh".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

ஆதாரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  • Mere Sansmaran, an autobiography by Dr. Anugrah Narayan Sinha
  • Anugrah Abhinandan Granth samiti. 1947 Anugrah Abhinandan Granth. Bihar.
  • Anugrah Narayan centenary year celebration Committee. 1987. Bihar Bibhuti : Vayakti Aur Kriti , Bihar.
  • Bimal Prasad (editor). 1980. A Revolutionary's Quest: Selected Writings of Jayaprakash Narayan. Oxford University Press, Delhi.

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. வழிமாற்று வார்ப்புரு:ஆளுமைக் கட்டுப்பாடு
"https://ta.bharatpedia.org/index.php?title=சியாமா_சிங்&oldid=2110" இருந்து மீள்விக்கப்பட்டது