சி.எச் முகமது கோயா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:தலைப்பை மாற்றுக சி. எச். முகமது கோயா (ஆங்கிலம்: C. H. Mohammad Koya) (பிறப்பு:15 ஜூலை 1927 - இறப்பு: செப்டம்பர் 1983 28), சி. எச். எனவும் அழைக்கப்படுகிறார் [1], இவரது முழுப்பெயர் செரியன் கந்தி முஹம்மது கோயா என்பதாகும். இவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் பத்திரிகையாளர் ஆவார். [2] இவர் 1979 அக்டோபர் 12 முதல் திசம்பர் 1, வரை கேரளாவின் எட்டாவது முதலமைச்சராக பணியாற்றியவர். இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக்கின் நீண்டகால செயலாளராக இருந்த அவர் கேரள முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே முஸ்லீம் ஆவார். கேரளாவின் கல்வி அமைச்சராக இருந்த காலங்களில்,(1967 முதல் 1977 வரை) கேரளாவில் முஸ்லிம் சமூகத்தின் கல்வியின் முன்னேற்றத்திற்காக சி. எச். பாடுபட்டார்.

அமைச்சரவை[தொகு | மூலத்தைத் தொகு]

1957 ஆம் ஆண்டு கேரள சட்டமன்றத்திற்கு நடைபெற்ற பிரபலமான தேர்தலில் சி. எச். அவர் பல முதலமைச்சர்களின் கீழ் பல முக்கிய கேரள அமைச்சரவை பதவிகளை (துணை முதலமைச்சர், கல்வி அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர்) வகித்துள்ளார். கேரள முதலமைச்சர்களான ( ஈ.எம்.எஸ். நம்பூதிர்பாடு, செ அச்சுத மேனன், கருணாகரன், ஏ. கே. அந்தோனி , மற்றும் பி.கே. வாசுதேவன் நாயர் ) போன்றவர்களின் அமைச்சரவையில் பணிபுரிந்துள்ளார். [1] [2] 1962 (1962 - 67) மற்றும் 1973 இல் (1973-77), அவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கேரள பல்கலைக்கழக சபை உறுப்பினராக இருந்த அவர், கோழிக்கோடு, தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின்,ஆட்சிக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார். [3]

இளமைக் காலம்[தொகு | மூலத்தைத் தொகு]

சி. எச். 1927 இல் இந்தியாவின் பகுதியான கேரளாவின் வடக்குப் பகுதி நகரமான அதோலி என்ற இடத்தில் பாயம்புனத்தில் அலி முசுலியார் மற்றும் மரியும்மா ஆகியோருக்குப் பிறந்தார். [2] [4] அவர் கோழிக்கோடு சமோரியன் கல்லூரியில் பள்ளி மாணவராக இருந்தபோது முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பை நிறுவினார். அவர் 1945 இல் லியாகத் அலிகானை காப்பாற்றி அவருக்கு உதவினார். 1946 ல் முஸ்லீம் லீக்கின் அதிகாரப்பூர்வ சந்திரிக்கா என்ற செய்தித்தாளில் சி.எச் பணியில் சேர்ந்தார். [5] இடைநிலைக் கல்வி மட்டுமே கொண்டிருந்தாலும், சி. எச். துணை ஆசிரியர் பணியிலிருந்து சந்திரிகாவின் ஆசிரியர் பணி வரை 1949 வரை பணியாற்றினார். [1] [6]

இறப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

1983 செப்டம்பரில் கேரள துணை முதல்வராக பணியாற்றியபோது சி. எச். காலமானார். [3] வார்ப்புரு:Quote box

ஆளுமை[தொகு | மூலத்தைத் தொகு]

சி. எச் ஒரு "தீவிரமான ஒரு சொற்பொழிவாளர்" என்று அனைவராலும் அறியப்பட்டார், மேலும் அறிஞர் ஆர். இ. மில்லரால் "மாப்பில்லா சமூகத்தின் அடிமட்ட நட்சத்திரம்" என்றும் கேரளாவில் "முஸ்லீம் இளைஞர்களின் நாயகன்" என்றும் வர்ணிக்கப்பட்டார். [1]

பணிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஒரு கல்வி அமைச்சராக (கேரளா), சி. எச். மதச்சார்பற்ற கல்வியில் மாப்பிலா சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டார். ஆனால் அதேசமயம், அரபு கல்லூரிகளில் உயர் தரத்தை ஆதரித்தார். [1] கோழிக்கோடு பல்கலைக்கழகம் அவரை கௌரவிக்கும் விதமாக "சி. எச் இருக்கை" என்பதை நிறுவியது. (வடக்கு கேரளா). [7] கேரளாவின் பல்வேறு சமூக மற்றும் மத குழுக்களிடையே சி. எச் ஒரு நல்லிணக்கத் தலைவராகச் செயல்பட்டார். 1955 இல் இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக்கை பகிரங்கமாக விமர்சித்தபோது இந்தியப் பிரதம மந்திரி ஜவகர்லால் நேருவுக்கு "தகுந்த" பதிலளித்ததற்காக சி. எச். நினைவு படுத்தப்படுகிறார். வார்ப்புரு:Wide Image

குறிப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Miller, E. Roland. "Mappila Muslim Culture" State University of New York Press, Albany (2015); p. 204, 235-36, 329, 333, and 345.
  2. 2.0 2.1 2.2 Chief Minister of Kerala (Official Website)
  3. 3.0 3.1 Kerala Legislative Assembly
  4. Miller, Roland. E., "Mappila" in "The Encyclopedia of Islam". Volume VI. E. J. Brill, Leiden. 1987. pp. 458-56.
  5. Jeffrey, Robin. "Politics, Women and Well-Being: How Kerala became a Model" Palgrave McMillan (1992); 112 and 114.
  6. Speakers & Deputy Speakers Book – Kerala Legislative Assembly
  7. Miller, Roland E. (2015-04-27) (in en). Mappila Muslim Culture: How a Historic Muslim Community in India Has Blended Tradition and Modernity. SUNY Press. பக். 236. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781438456010. https://books.google.co.in/books?id=TC6zCAAAQBAJ&pg=PA236#v=onepage&q&f=false. 

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
C. H. Mohammed Koya
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.bharatpedia.org/index.php?title=சி.எச்_முகமது_கோயா&oldid=2708" இருந்து மீள்விக்கப்பட்டது