சி. முத்துசாமி கவுண்டர்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Officeholder சி. முத்துசாமி கௌண்டர் (பிறப்பு 1917) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திராக் கட்சி அரசியல்வாதி ஆவார். இவர் 1967 முதல் 1971 வரை கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

பின்னணி[தொகு | மூலத்தைத் தொகு]

முத்துசாமி கௌண்டர் 1917 இல் சென்னை மாகாணத்தின் கரூரின் ஒரு முக்கிய குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை மாவட்ட அளவிலான அரசியல்வாதியாகவும், தாலுகா மற்றும் மாவட்ட வாரியங்களில் உறுப்பினராகவும் இருந்தார். இவரது மாமா மக்களவை உறுப்பினராக இருந்தார். முத்துசாமி வேளாண் அறிவியலில் பட்டம் பெற்றவர்.

அரசியல்[தொகு | மூலத்தைத் தொகு]

முத்துசாமி, துவக்கத்தில், இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்து, பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக பணியாற்றினார். 1957 இல், இவர் இந்திய தேசிய காங்கிரசை விட்டு வெளியேறி, ராஜாஜி தொடங்கிய தேசிய ஜனநாயக காங்கிரசில் சேர்ந்தார். அக்கட்சியானது சுதந்திராக் கட்சியுடன் இணைக்கப்படும் வரை இவர் தேசிய ஜனநாயக காங்கிரசின் இணைச் செயலாளராக இருந்தார். சுதந்திரா கட்சியின் திருச்சிராப்பள்ளி மாவட்டப் பிரிவின் தலைவரான இவர், கரூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

முத்துசாமி 1967 முதல் 1971 வரை கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1971இல் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் கே. கோபாலிடம் தோல்வியுற்றார்.

குறிப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]